பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெய் ஸ்ரீராம் கோஷம்.. ஹிஜாப்பிற்கு எதிராக "காவி ஷால்" அணிந்த மாணவிகள்.. சொன்ன காரணம் என்ன தெரியுமா?

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவில் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக அங்கு பியு கல்லூரிகளில் படிக்கும் இந்துத்துவா மாணவிகள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கர்நாடகாவில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு இருக்கும் பல பியு கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர கூடாது என்று கல்லூரி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இந்த நிலையில் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக இந்துத்துவா கொள்கை கொண்ட மாணவர்கள் காவி துண்டு அணிந்து போராட்டம் செய்து வருகின்றன..

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 74,416 வேட்பு மனு தாக்கல்..தேர்தல் ஆணையம் அறிவிப்பு தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 74,416 வேட்பு மனு தாக்கல்..தேர்தல் ஆணையம் அறிவிப்பு

மாணவிகள் போராட்டம்

மாணவிகள் போராட்டம்

இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு இந்துவா மாணவிகளும் போராட்டம் நடத்த தொடங்கி உள்ளனர். இந்து மாணவிகள் பலர் காவி நிற ஷால் அணிந்து சாலையில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். குந்தபுரா பகுதியில் உள்ள பல்வேறு பியு கல்லூரிகளை சேர்ந்த இந்துத்துவா மாணவிகள் சாலையில் இறங்கி காவி நிற ஷால் அணிந்து ஹிஜாப் அணியும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஜெய் ஹிந்த்

ஜெய் ஹிந்த்

இந்த கூட்டத்தில் மாணவிகள் எல்லோரும் சேர்ந்து தொடர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பினர். அதேபோல் ஜெய் ஹிந்த் என்றும் கோஷம் எழுப்பி வந்தனர். குந்தபுராவின் ஒரே பியு கல்லூரி என்று இல்லாமல் வெவ்வேறு பியு கல்லூரிகளை சேர்ந்த மாணவிகள் பலர் கும்பல் கும்பலாக நின்று கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பல பியு கல்லூரிகள் இன்று இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தாங்கள் காவி நிற ஷாலை திடீரென அணிவது ஏன் என்று அந்த இந்து மாணவிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஹிஜாப் அணிய தடை

ஹிஜாப் அணிய தடை

மாணவிகள் அளித்துள்ள பேட்டியில், இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்கப்பட்டால் எங்களுக்கு காவி ஷால் அணிய அனுமதி கொடுக்க வேண்டும். சிம்பிள் விஷயம் இது. அவர்கள் அவர்களின் மதத்தை பின்பற்றினால் நாங்களும் எங்கள் மதத்தை பின்பற்றுவோம். எல்லோரும் சமமான உடை அணிய வேண்டும். இல்லையென்றால் நாங்களும் இப்படித்தான் பியூ கல்லூரிக்கு ஷால் அணிந்து வருவோம். எங்களை நீங்கள் குற்றம் சொல்ல முடியாது.

Recommended Video

    கர்நாடகாவில் மாணவிகளுக்கு ஹிஜாப் அணிய தடை.. லோக்சபாவில் குரல் எழுப்பிய திமுக எம்பி செந்தில்குமார்
    காவி ஷால்

    காவி ஷால்

    காவி ஷால் எங்களின் உரிமை. நாங்கள் ஹிஜாப் அணியும் மாணவிகளை தடை செய்யவில்லை. அவர்கள் ஹிஜாப் அணிந்தால் நாங்களும் காவி ஷால் அணிவோம் என்றுதான் கூறுகிறோம். எல்லோருக்கும் பள்ளியில் ஒரே ரூல்ஸ்தான் போட வேண்டும். இல்லையென்றால் நாங்கள் பியூ கல்லூரிக்கு செல்ல மாட்டோம். இஸ்லாமிய மாணவிகளுக்கு ஒரு சட்டம், எங்களுக்கு ஒரு சட்டமா என்று இந்துத்துவா கொள்கை கொண்ட மாணவிகள் தெரிவித்துள்ளனர்.இந்துத்துவா மாணவிகளின் இந்த போராட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Karnataka PU College Hindu girls spoke against Muslim girls for wearing Hijab in class room.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X