Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“அப்படியொரு முதலீடே எங்களுக்கு வேண்டாம்..” வம்பிழுத்த சந்திரபாபு நாயுடு மகனுக்கு கர்நாடகா பதிலடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கூகுள் ஏஐ மையத்திற்கு முதலீடு செய்யும் நிலையில், அண்டை மாநிலமான கர்நாடகாவைச் சீண்டும் வகையில் ஆந்திர ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் ட்வீட் செய்திருந்தார். அது இணையத்தில் டிரெண்டாகி வந்த நிலையில், அதற்குக் கர்நாடக ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.

கூகுள் நிறுவனம் சமீபத்தில் தான் விசாகப்பட்டினத்தில் ஒரு பிரம்மாண்ட ஏஐ மையத்தை அமைக்கவுள்ளதாக அறிவித்தது. இதற்காகக் கூகுள் நிறுவனம் 15 பில்லியன் டாலரை முதலீடு செய்யவுள்ளது. இது தொடர்பாக ஆந்திர ஐடி துறை அமைச்சர் நாரா லோகேஷ், கர்நாடகாவை வம்புக்கு அழுத்திருந்தார். அண்டை மாநிலங்களின் வயிறு எரிகிறது என்பது போல ட்வீட் செய்திருந்தார். அது இணையத்தில் பேசுபொருள் ஆனது.

Karnataka sharp reply pointing 10 Lakh Crore Andhra Debt over Nara Lokesh Google investment comment

பொருளாதார பேரழிவு

முன்பே ஆந்திராவின் முதலீடுகள் குறித்து கர்நாடக ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார். அதாவது முதலீடுகளைப் பெற ஆந்திரா தரும் சலுகைகள் மறைக்கப்படுவதாகவும் அது ஒரு "பொருளாதார பேரழிவு" என்றும் அமைச்சர் பிரியங்க் கார்கே விமர்சித்தார். முதலீடுகளைப் பெற ஆந்திரா பெரிய விலை கொடுக்க வேண்டி உள்ளதாகவும் அவர் சாடினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "கூகுளின் முதலீட்டை அவர்கள் பெருமையாகப் பேசுகிறார்கள்.. ஆனால் அதற்காகக் கொடுக்கும் பெரிய மானியங்களை மறைக்கிறார்கள். மாநில அரசின் ஜிஎஸ்டியை முழுமையாக திரும்பக் கொடுப்பது, மானிய விலையில் நிலம், நீர் மற்றும் மின்சாரத்தைக் கொடுப்பது என ஏகப்பட்ட சலுகைகளை ஆந்திர அரசு கொடுத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ₹22,000 கோடியாகும்" என்று சாடியிருந்தர்.

கொந்தளித்த கர்நாடக மக்கள்

இதைத் தொடர்ந்தே ஆந்திர ஐடி அமைச்சர் நாரா லோகேஷுன் அந்த ட்விட்டர் பதிவு வந்திருந்தது. நாரா லோகேஷ் தனது ட்வீட்டில் கர்நாடகாவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் அவர்களைத் தான் சொல்கிறார் என்பது தெளிவாகவே தெரிந்தது. இது கர்நாடக மக்கள் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

பிரியங்க் கார்கே

இதற்கிடையே பிரியங்க் கார்கே இந்த விவகாரம் தொடர்பாக மேலும் சில கருத்துகளைக் கூறியுள்ளார்.. அதில் அவர், "கர்நாடகா தனது எதிர்காலத்தை விற்காமல் ஐடி துறையை படிப்படியாகக் கட்டியெழுப்பியுள்ளது.. புதுமை, திறமை மற்றும் நிலையான கொள்கை ஆகியவை காரணமாக மட்டுமே பெங்களூர் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஐடி மையமாக உருவெடுத்துள்ளது. நாங்கள் ஒருபோதும் இலவசங்களால் முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை. எங்களிடம் இருக்கும் மிக சிறந்த எகோசிஸ்டம் தான் எதிர்காலத்திற்குத் தேவையான முதலீடுகளைத் தொடர்ந்து ஈர்க்கிறது" என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரியங்க் கார்கேவும் ஆந்திராவை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் நாரா லோகேஷுக்கு அவர் கொடுத்த பதிலடியாகவே இது பார்க்கப்படுகிறது. பிரியங்க் கார்கே இத்தோடு விட்டுவிடவில்லை. அவர் தனது ட்விட்டரிலும் கர்நாடகாவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் ஒரு போஸ்ட்டை போட்டார். நாரா லோகேஷ் பாணியில் அண்டை மாநிலம் எனக் குறிப்பிட்டு ஆந்திரா மீதான விமர்சனத்தை முன்வைத்தார்.

Karnataka sharp reply pointing 10 Lakh Crore Andhra Debt over Nara Lokesh Google investment comment

பதிலடி

அதில் அவர், "உணவில் காரம் சற்று தூக்கலாக இருந்தால் அனைவருக்கும் பிடிக்கும் என்றாலும், ஊட்டச்சத்து நிபுணர்கள் எப்போதும் சமச்சீர் உணவைத் தான் பரிந்துரைப்பார்கள்.. அதேபோல பொருளாதார நிபுணர்களும் சமச்சீர் பட்ஜெட்டை ஆதரிக்கின்றனர். அண்டை மாநிலத்தின் மொத்த கடன்கள் தற்போது கிட்டத்தட்ட ₹10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளன.

ஒரே ஆண்டில், அவர்கள் ₹1.61 லட்சம் கோடிக்கு மேல் கடன் வாங்கியுள்ளனர். மேலும், ஜிஎஸ்டிபி-க்கான வருவாய் பற்றாக்குறை 2.65% இலிருந்து 3.61% ஆக அதிகரித்து மோசமடைந்துள்ளது. எது எப்படியாயினும், நாம் எப்போதும் அண்டை மாநிலம் பொறாமைப்படும் அளவுக்கு நாம் வளர்வோம்" எனச் சொல்லி ஒனிடா விளம்பரத்தில் வரும் "Neighbour's envy and Owner's pride" என்ற வாசகத்தை பதிவிட்டிருந்தார்.

அப்படியொரு முதலீடே தேவையில்லை

கார்கேவின் இந்த ட்வீட் இணையத்தில் உடனடியாக டிரெண்டானது. கர்நாடக மக்கள் பலரும் கார்கே ட்வீட்டை பகிர்ந்து வருகிறார்கள். மேலும், இதுபோன்ற சலுகைகளை அள்ளி கொடுத்து எதிர்காலத்தை காலி செய்யும் முதலீடுகளே தங்களுக்குத் தேவையில்லை என்றும் பதிவிட்டு வருகிறார்கள். இப்படி ஆந்திரா vs கர்நாடகா என்றே நெட்டிசன்கள் சண்டையிட்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+