கர்நாடகாவில் பரபரப்பு.. தப்பி ஓடிய பிரஜ்வல் தாயார் பவானியை வலை வீசி தேடும் சிறப்பு புலனாய்வு குழு!
பெங்களூர்: 3000 ஆபாச வீடியோக்களில் சிக்கிய கர்நாடகா ஹாசன் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மீதான வழக்குகளில் தப்பி ஓடிய அவரது தாயார் பவானி ரேவண்ணாவை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் வலை வீசி தேடி வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு. இது தொடபாக சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது ரேவண்ணா ஜாமீனில் இருக்கிறார். வெளிநாட்டில் 1 மாதத்துக்கும் மேலாக பதுங்கி இருந்த பிரஜ்வல் பெங்களூர் திரும்பிய உடன் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார்.
தற்போது இந்த வழக்கில் பிரஜ்வலின் தாயார் பவானி ரேவண்ணா வலை வீசி தேடப்பட்டு வருகிறார். பிரஜ்வல் வழக்கில் கடந்த ஒரு மாதமாக பல முறை பவானிக்கு சிறப்பு புலனாய்வுக் குழு சம்மன் அனுப்பியது. இந்த சம்மனுக்கு ஒரு முறை கூட பவானி பதிலளிக்கவும் இல்லை; விசாரணைக்கு ஆஜராகவும் இல்லை.
இதனையடுத்து இன்று பெங்களூர், மைசூர், மண்டியா உள்ளிட்ட பல இடங்களில் பவானியின் வீடு உட்பட பல இடங்களில் சிறப்புப் புலனாய்வுக் குழு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். பவானி ரேவண்ணா எங்கே பதுங்கி இருக்கிறார் என்பது தெரியாமல் இந்த தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பவானி ரேவண்ணாவை சிறப்புப் புலனாய்வுக் குழு போலீசார் தீவிரமாக தேடி வருவது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications