பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அவர் மீது மட்டும் ஏன் நடவடிக்கை இல்லை.. பிஎஸ்பி எம்எல்ஏவை நீக்காத சபாநாயகர்.. ஏதேனும் திட்டமோ?

கர்நாடகாவில் இருக்கும் ஒரே ஒரு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவான என் மகேஷை கர்நாடக சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக சபாநாயகர் அதிரடி... மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

    பெங்களூர்: கர்நாடகாவில் இருக்கும் ஒரே ஒரு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவான என்.மகேஷை கர்நாடக சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் அளித்ததில் இருந்தே கர்நாடக அரசியல் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதனால்தான் கர்நாடகாவில் காங்கிரஸ் - மஜத கூட்டணி சார்பாக குமாரசாமி நடத்தி வந்த ஆட்சி பெரும்பான்மை இல்லாமல் கலைந்தது.

    இந்த நிலையில் இவர்கள் கட்சித்தாவல் தடை சட்டத்தை மீறிவிட்டதாக தற்போது தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். முதற்கட்டமாக மூன்று பேர்தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    பாஜக என்ன செய்துவிடும்.. அனைத்தையும் எதிர்கொள்ள தயார்.. கர்நாடக சபாநாயகர் சவால்! பாஜக என்ன செய்துவிடும்.. அனைத்தையும் எதிர்கொள்ள தயார்.. கர்நாடக சபாநாயகர் சவால்!

    என்ன நீக்கம்

    என்ன நீக்கம்

    வியாழக்கிழமை இரவு அதிருப்தி எம்எல்ஏக்கள் மகேஷ் கும்தஹள்ளி, ரமேஷ் ஜார்கிகோலி மற்றும் கர்நாடக சுயேச்சை எம்எல்ஏ சங்கர் ஆகியோரை சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். இன்று மீதம் இருந்த எம்எல்ஏக்களையும் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்தார். இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 14 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

    எத்தனை பேர்

    எத்தனை பேர்

    அதன்படி தற்போது 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மஜத எம்எல்ஏக்கள். ஒரு சுயேச்சை எம்எல்ஏ ஆகியோர் தகுதி நீக்கப்பட்டுள்ளனர். இதனால் 17 எம்எல்ஏக்களின் பதவி பறிபோய் இருக்கிறது. இவர்கள் இல்லாமல் கட்சி உத்தரவை மீறி பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ மகேஷ், குமாரசாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார்.

    இன்னும் இல்லை

    இன்னும் இல்லை

    ஆனால் இவரை இன்னும் சபாநாயகர் ரமேஷ் குமார் தகுதி நீக்கம் செய்யவில்லை. இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏற்கனவே பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இவரை ஏற்கனவே மாயாவதி கட்சியில் இருந்து நீக்கி உள்ளார்.

    காரணம்

    காரணம்

    ஆனால் இன்னும் சபாநாயகர் ரமேஷ் குமார், எம்எல்ஏ மகேஷ் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இவர் மீதான நடவடிக்கையை பின்பு எடுப்பேன் என்று சபாநாயகர் தெரிவித்துள்ளார். நாளை இவர் ஒருவேளை பாஜக கட்சிக்கு எதிராக வாக்களிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதனால்தான் இவரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யவில்லையா, இவரை வைத்து காங்கிரஸ் மஜத ஏதாவது கேம் ஆடுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Karnataka speaker hasn't decided anything on the disqualification of Single BSP MLA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X