பிகினி ஆடையில் கர்நாடகா மாநிலத்தின் கொடி.. கொதித்த கன்னடர்கள்.. மன்னிப்பு கோர அமேசானுக்கு அழுத்தம்
பெங்களூர்: பிகினி ஆடையில் கர்நாடகா மாநிலத்தின் கொடி, அதன் நிறம் பதித்து விற்பனை செய்த அமேசான் நிறுவனம் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
அமேசான் எனப்படும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் வறட்டி முதல் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ஆடைகளையும் விற்பனை செய்கிறது.
இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் கனடா இணையதளத்தில் பிகினி ஆடையை அறிமுகம் செய்திருந்தது. இதை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.

பிகினி ஆடை
காரணம் என்னவெனில் அந்த பிகினி ஆடையானது கர்நாடக மாநிலத்தின் கொடி நிறத்தில் அமைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த ஆடையில் அந்த மாநிலத்தின் கொடியும் இடம் பெற்றிருந்தது. இதையடுத்து இந்த புகைப்படம் வைரலானது.

எதிர்ப்பு
இதற்கு கன்னட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அண்மையில் இந்தியாவிலேயே கன்னடம் மிகவும் மோசமான மொழி என கூகுள் நிறுவனம் தெரிவித்திருந்து அது சர்ச்சையாகி பின்னர் அந்த நிறுவனம் மன்னிப்பு கோரியது. தற்போது இந்த ஈ காமர்ஸ் நிறுவனமான அமேசான் நிறுவனம் பெண்கள் அணியும் உள்ளாடையில் கர்நாடகாவின் அரசின் கொடியை பதித்து அவமானப்படுத்தியுள்ளது.

கன்னட மொழி
இதுகுறித்து கர்நாடகா மாநில கன்னட மொழி மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் அரவிந்த் லிம்பாவலி சனிக்கிழமை கூறுகையில் அண்மையில் கூகுள் நிறுவனம் கன்னட மொழியை அவமானப்படுத்தியது. அந்த காயங்கள் ஆறுவதற்கு முன்னரே அமேசான் கனடாவில் பிகினி உடையில் எங்கள் மாநிலத்தின் கொடி இடம்பெற்றுள்ளது.

பன்னாட்டு நிறுவனங்கள்
கன்னடர்களை இவ்வாறு தொடர்ந்து அவமதிக்கும் போக்கை பன்னாட்டு நிறுவனங்கள் கைவிட வேண்டும். இது கன்னடர்களின் பெருமைக்கு பங்கம் விளைவிக்கும் விஷயம். இது போன்ற சம்பவங்களை எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. எனவே அமேசான் கனடா நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என லிம்பாவலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications