"உள்நாட்டு பாதுகாப்பு ஐஜி"..கர்நாடகாவில் தமிழர் தியாகராஜன் ஐபிஎஸ்-க்கு மிக முக்கிய பதவி தந்த சித்து!
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தின் உள்நாட்டு பாதுகாப்பு ஐஜியாக தமிழரான தியாகராஜன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மண்டல ஐஜியாக பணிபுரிந்து வந்த தியாகராஜன் ஐபிஎஸ் தற்போது கர்நாடகாவின் உள்நாட்டு பாதுகாப்பு ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகாவில் பொதுவாக அரசு பணிகளில் பிற மாநிலத்தவருக்கு எதிரான குரல்கள் எப்போதும் கேட்கும். அண்மையில் கூட போக்குவரத்து துறையில் பிற மாநிலத்தவர் 50-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் கூண்டோடு பணி நீக்கம் செய்யப்பட்ட நிகழ்வும் நடந்தது. அதேபோல அல்சூர் திருவள்ளுவர் சிலையை சில விஷமிகள் அவமதித்த நிகழ்வும் அரங்கேறியது.

இதற்கு நேர் மாறாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா, தமிழர் ஒருவருக்கு அம்மாநில காவல்துறையில் உயரிய பதவியை வழங்கி இருக்கிறார்.
கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மாநிலத்தின் 25 ஐபிஎஸ் அதிகாரிகளை ஒரே நேரத்தில் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். கர்நாடகாவின் நுண்ணறிவு பிரிவு ஐஜியான லாபுராம்- பெங்களூர் மத்திய மண்டல ஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
பெங்களூர் மத்திய மண்டல ஐஜியாக இருந்த ரவிகாந்தே கவுடா தற்போது பெங்களூர் தலைமையிட ஐஜியாக நியமிக்கப்பட்டுளார்.
கிழக்கு மண்டல ஐஜியாக இருந்தவர் தமிழரான தியாகராஜன் ஐபிஎஸ். தற்போது கர்நாடகாவின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். கர்நாடகாவில் தமிழருக்கு காவல்துறையில் மிக உயர்ந்த பதவியை கொடுத்துள்ளார் முதல்வர் சித்தராமையா என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications