பெங்களூர் உட்பட கர்நாடகாவில்.. வீட்டை விட்டு வெளியே போகும்போது, மக்கள் மாஸ்க் அணிய அரசு வலியுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இரு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. (Human Metapneumovirus - மனித மெட்டாநியூமோ வைரஸ்) தொற்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கர்நாடகா அரசு மாஸ்க் தொடர்பாக அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்றும், கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பரவலைக் குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hmpv virus hmpv

சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், வைரசால் பாதிக்கப்பட்ட 8 மாத குழந்தை நலமாக உள்ளது. அவர் நாளை (திங்கட்கிழமை) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தார்.

"இது புதிய வைரஸ் அல்ல. இது முதல் முறையாக கண்டறியப்படுவதும் இல்லை. இந்த வைரஸ் 2001 ஆம் ஆண்டு நெதர்லாந்தில் முதன்முதலில் கண்டறியப்பட்டது. குறிப்பிட்ட வகை மக்களுக்கு இந்த வைரஸ் சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

"பீதி அடையத் தேவையில்லை" என்று அறிவுறுத்திய அவர், மருத்துவ அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி, ஐ.சி.எம்.ஆர் மற்றும் மத்திய அரசுடன் மேலும் கூட்டம் நடத்துமாறு அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார். "இந்த வைரஸ் சீனாவிலிருந்து வந்ததா என்பது தெரியவில்லை. அவர்களுக்கு சர்வதேச பயண வரலாறு இல்லை. அவர்கள் திருப்பதியிலிருந்து வந்தவர்கள்" என்றும் அவர் கூறினார்.

முதல்வர் சித்தாராமய்யா கூறுகையில், "இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து எனக்குத் தெரிந்தவுடன், தினேஷ் குண்டு ராவ் அவர்களிடம் பேசினேன். அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் செயல்படுத்தப்படும். நோய் பரவலைத் தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" என்றார்.

இதற்கிடையில், தொற்று பரவலைக் குறைக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று கர்நாடகா அரசு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+