கணவனின் உடலை குளியலறைக்குள் தரதரவென இழுத்து.. இளம் மனைவி செய்த காரியத்தை பாருங்க.. உச்சக்கட்ட கொடுமை
பெங்களூர்: கர்நாடகாவில் நடந்த சம்பவம் பொதுமக்களை நிலைகுலைய வைத்து வருகிறது.. இது தொடர்பான 2 பேர் கைதாகி உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது ஹாவேரி மாவட்டத்தில்?
கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் அருகே உள்ளது சிக்கரூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் சாதிக்.. இவருக்கு 30 வயதாகிறது.. மனைவி பெயர் சல்மா.. 25 வயதாகிறது.. இவர்களுக்கு கடந்த 2021ல் திருமணம் நடந்துள்ளது.. ஆனால், தம்பதிக்கு குழந்தைகள் இல்லை என்று கூறப்படுகிறது.

2 வீட்டு பெற்றோர்களும் பார்த்து நடத்தி வைத்த திருமணம் இதுவென்றாலும், திருமணத்திற்கு முன்பு சல்மா, ஜாபர் என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.. திருமணத்திற்கு பிறகும் அவருடன் சல்மா நெருங்கி பழகி வந்திருக்கிறார்.. அதுமட்டுமல்லாமல், 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர்.
கணவர் கொலை: இந்த கள்ளக்காதல் விவகாரம் சாதிக்கிற்கு தெரியவந்ததையடுத்து, அதிர்ச்சியடைந்தார்.. சல்மாவை கண்டித்தார்.. கள்ளக்காதலை கைவிட சொன்னார்.. ஆனால், சாதிக்கின் பேச்சை சல்மா கேட்கவில்லை.. இதனால், தம்பதிக்குள் தகராறு தொடர்ந்தது.. கடந்த 25-ந் தேதியும் மீண்டும் தம்பதிக்குள் தகராறு வெடித்தது..
ஒருகட்டத்தில் எரிச்சலடைந்த சல்மா, உல்லாசத்திற்கு இடையூறாக இருந்த கணவரை கொன்றுவிடுவது என்று முடிவெடுத்தார்.. இதுகுறித்து ஜாபரிடம் சொல்லவும், அவரும் சாதிக்கை கொல்ல சம்மதித்தார்..
அதன்படியே, சம்பவத்தன்று இரவு சல்மாவும், ஜாபரும் சேர்ந்து சாதிக்கின் கழுத்தை நெரித்தனர்.. பிறகு மரக்கட்டையால் சாதிக்கை கொடுமையாக தாக்கினர்.. இதில் சாதிக் துடிதுடித்து இறந்துவிட்டார்.. பிறகு, சாதிக்கின் சடலத்தை, தரதரவென குளியல் அறைக்கு இழுத்து சென்று, உடம்பிலிருந்த ரத்த கறைகளை எல்லாம் கழுவினார்..
ஒப்பாரி : அதற்கு பிறகு, அக்கம் பக்கத்தினரிடம் ஓடிச்சென்று, பாத்ரூமில் சாதிக் வழுக்கி விழுந்துவிட்டதாக ஒப்பாரி வைத்தார்.. பிறகு சாதிக்கின் குடும்பத்தினருக்கும் விஷயத்தை சொல்லி அழுதார்.
இதைக்கேட்ட சாதிக் குடும்பத்தினர், பதறியடித்து கொண்டு வந்து, சாதிக்கின் சடலத்தை பார்த்து கதறி அழுதனர்.. பிறகு இறுதிச்சடங்கையும் செய்து, சாதிக்கின் உடலை புதைத்து விட்டனர்.. ஆனால், சடலத்தை புதைத்த மறுநாளே, சல்மாவின் நடவடிக்கையில் நிறைய மாற்றங்கள் தென்பட்டுள்ளது.. சாதிக்கின் சகோதரர் இதனை கவனித்துள்ளார்.. அதற்கு பிறகுதான், சாதிக் குளியல் அறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்திருக்க வாய்ப்பிருக்காது என்று நினைத்து, ஹம்சபாவி போலீசில் புகார் அளித்தார்.
கிடுக்கிப்பிடி: போலீசாரும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை சல்மாவிடம் துவங்கினர்... எடுத்ததுமே முன்னுக்குபின் முரணாக பேச துவங்கினார் சல்மா.. பிறகுதான், போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, மொத்த உண்மையையும் ஒப்புக்கொண்டார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் சாதிக்கை ஜாபருடன் சேர்ந்து கொன்றதாக வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து, கள்ளக்காதல் ஜோடியை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர்.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications