கனவில் வந்த சாமி சிலை! பூமிக்கடியில் கிடைத்த கிருஷ்ணரால் மொத்த நிலத்தையும் இழந்த பெங்களூர்வாசி
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த நபரின் கனவில் அடிக்கடி சாமி சிலை வந்த நிலையில் அவரது நிலத்தை தோண்டிப்பார்த்தபோது கிருஷ்ணர் சிலை கிடைத்தது. இதையடுத்து கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டபோது திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டது. இதையடுத்து மொத்த நிலத்தையும் அரசு கைப்பற்றியது.
பெங்களூரை சேர்ந்தவர் லட்சுமண் (வயது 55). இவருக்கு சொந்தமான நிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி அருகே தெக்கார் கிராமத்தில் உள்ளது. இங்கு அவர் விவசாயம் செய்து வருகிறார். பழச்செடிகள், பாக்கு மரங்களை அவர் பயிரிட்டுள்ளார்.

இந்நிலையில் தான் லட்சுமண் சமீபத்தில் ஒரு கனவு கண்டார். அந்த கனவில் கிருஷ்ணர் தோன்றியுள்ளார். பலமுறை இந்த கனவுகள் அவருக்கு வந்துள்ளது.
இந்நிலையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்த அவரது கனவு என்பது, ‛‛அவரும் அவரது நண்பரும் தெக்கார் கிராமத்தில் உள்ள தோட்டத்துக்கு செல்கின்றனர். அங்குள்ள கிணற்றில் அவரது நண்பர் குளிக்கிறார். திடீரென்று தண்ணீரில் அவர் மூழ்கவே, அவரை தேடி லட்சுமண் கிணற்றில் குதித்தார். அப்போது கிணற்றில் கிருஷ்ணர் சிலை தெரிகிறது'' எனும் வகையில் அமைந்திருந்தது. இதையடுத்து திடுக்கிட்டு விழித்த லட்சுமண் மறுநாள் காலையில் தெக்கார் கிராமத்துக்கு சென்றார்.
அங்கு ஒருவர் அவரது நிலம் எனக்கு சொந்தம் எனக்கூறி உரிமை கொண்டாடினார். மேலும் ஜேசிபி வாகனம் கொண்டு அவர் நிலத்தை தோண்டினார். இதற்கு லட்சுமண் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வேளையில் லட்சுமண் அங்குள்ள மக்களிடம் தனக்கு வந்த கனவு குறித்தும், இந்த நிலத்தில் கிருஷ்ணர் சிலை இருப்பது பற்றியும் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த ஜேசிபி வாகனம் மூலம் குறிப்பிட்ட இடத்தை தோண்டியபோது பூமிக்கடியில் புதைந்து இருந்த கிருஷ்ணர் சிலை கிடைத்தது. இதையடுத்து பொதுமக்கள் பரவசமடைந்தனர். மேலும் சிலை கிடைத்த இடத்தில் கோவில் கட்ட அவர்கள் முடிவு செய்தனர். இதற்கிடையே தான் லட்சுமண் மற்றும் இன்னொரு நபருக்கு இடையேயான நில பிரச்சனை அடுத்தக்கட்டத்துக்கு சென்றது.
இதையடுத்து சர்வேயர்கள் வரவழைக்கப்பட்டு நிலம் அளவிடப்பட்டது. அப்போது 25 சென்ட் நிலம் என்பது அரசுக்கு சொந்தமானது என்பதும், முதலில் யாரோ அதனை ஆக்கிரமித்து வைத்திருப்பதும், அதனை லட்சுமண் வாங்கி விவசாயம் செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து விவசாயம் செய்ததற்கான இழப்பீடாக லட்சுமணுக்கு நிவாரணம் வழங்குவதாக கூறி அந்த நிலத்தை அரசு மீட்டெடுத்தது. மேலும் சிலையையும் அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி அந்த சிலை சுமார் 600 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம். மேலும் இதற்கு முன்பு அந்த இடத்தில் கோவில் இருந்திருக்கலாம் எனவும், கோவிலில் சிலை பூமிக்கடியில் புதைந்து இருந்த நிலையில் தற்போது அது கிடைத்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
பெங்களூரில் 1 BHK-க்கு 40 ஆயிரம் வாடகை.. ஐடி பெண் ஊழியர் எடுத்த விசித்திர முடிவு.. பெரும் விவாதம் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர்












Click it and Unblock the Notifications