பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்சியை கலைக்க சபாநாயகருக்கு பாஜக ரூ.50 கோடி லஞ்சம்.. ஆடியோ வெளியிட்டு குமாரசாமி பகீர் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடக சபாநாயகருக்கு, பாஜக தலைவர் எடியூரப்பா ரூ.50 கோடி வழங்கி ஆட்சியை கவிழ்க்க சதி செய்ததாக அம்மாநில முதல்வர் எச்.டி.குமாரசாமி பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

கர்நாடகாவில் நடைபெறும் காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்வராக உள்ளார். இந்த நிலையில், 7 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திடீரென தலைமையிடம் சொல்லிக்கொள்ளாமல் மும்பையில் முகாமிட்டுள்ளனர். இதனால் ஆட்சி கவிழும் சூழல் எழுந்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக அரசின் பட்ஜெட் இன்று பகல் 12.30 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. முன்னதாக தனது வீட்டில் நிருபர்களை சந்தித்தார் குமாரசாமி. அப்போது அவர் கூறியதாவது:

எம்எல்ஏவுடன் எடியூரப்பா சந்திப்பு

எம்எல்ஏவுடன் எடியூரப்பா சந்திப்பு

ம.ஜ.த எம்எல்ஏ சரண் கவுடாவிற்கு, எடியூரப்பா போனில் அழைப்பு விடுத்துள்ளார். தேவதுர்கா என்ற பகுதியில் இன்று அதிகாலை 12.30 மணிக்கு இந்த சந்திப்பு நடந்துள்ளது. அப்போது, ஆட்சிக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் பெற்றுவிட்டு, பாஜகவில் இணையுமாறும், இவ்வாறு செய்தால் அமைச்சர் பதவியும் ரூ.25 கோடி பணமும் வழங்கப்படும் எனவும் எடியூரப்பா பேரம் பேசியுள்ளார்.

சபாநாயகருக்கு 50 கோடி

சபாநாயகருக்கு 50 கோடி

மேலும், சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு ரூ.50 கோடி கொடுத்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது அரசை கவிழ்க்க திட்டம் வைத்துள்ளதாகவும், எடியூரப்பா கூறியுள்ளார். இவ்வளவு பணம் இவர்களுக்கு ஏது? பண மதிப்பிழப்புக்கு பிறகு இந்த பணம் பாஜக தலைவர்களிடம் வந்தது எப்படி?

சபாநாயகருக்கு கடிதம்

சபாநாயகருக்கு கடிதம்

கர்நாடக அரசியல் வரலாற்றில் இல்லாத களங்கமாக, சபாநாயகருக்கே லஞ்சம் தரப்பட்டுள்ளது. இதுகுறித்து சபாநாயகருக்கு நான் கடிதம் எழுதி, லஞ்சம் கொடுக்க முயன்றோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுக்க உள்ளேன். இவ்வாறு குமாரசாமி தெரிவித்தார்.

ஆடியோ பதிவு

ஆடியோ பதிவு

மேலும், ஆடியோ பதிவு ஒன்றை அவர் வெளியிட்டார். அதில், எடியூரப்பா இந்த எம்எல்ஏவுடன் பேசுவதை போன்ற ஆடியோ பதிவு உள்ளது. அதில், 15 எம்எல்ஏக்கள் தங்கள் வசம் இருப்பதாகவும், சபாநாயகருக்கு ரூ.50 கோடி வழங்க பேரம் பேசப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ரமேஷ்குமார் தனது நண்பர் என்றும், ஆளுநர் மூலமாக அரசை கலைக்கவும் ஏற்பாடு செய்வதாகவும் எடியூரப்பா கூறுவதை போல வாய்ஸ் கேட்கிறது.முதல்வர் குமாரசாமியின் இந்த குற்றச்சாட்டால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

English summary
Karnataka CM Kumaraswamy alleged BJP offered bribe of RS 50 crores to Speaker.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X