அவரு ஹேப்பி! கல்யாணம் பண்ணாதான் தப்பு.. லிவ்-இன் உறவு தப்பில்லை! அதிரடியாக உத்தரவிட்ட ஹைகோர்ட்!
பெங்களூர்: திருமணமான நபர் மற்றொரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதோ லிவ்-இன் உறவில் இருப்பதோ இருதார மணம் ஆகாது என கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. 73 வயது முதியவர் ஒருவர், வேறு பெண்ணுடன் வாழ்வதாக அவரின் மனைவி தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ரத்து செய்ததோடு, முதல் திருமணம் அமலில் இருக்கும்போது, முறையாகச் சடங்குகளுடன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் மட்டுமே அது இருதார மணம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளது.
66 வயதுடைய பெண் ஒருவர் தனது 73 வயது கணவர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக குற்றம்சாட்டி வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி, கணவர் மட்டுமல்லாமல் அவரது இரண்டு மகன்களும் இந்தச் சம்பவத்தில் உடந்தையாக இருந்தாகக் கூறி, ஐபிசி 494 மற்றும் ஐபிசி 34 கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.நடராஜ், தனது உத்தரவில் முக்கியமான சட்ட விளக்கத்தை வழங்கினார். இந்திய குற்றச் சட்டத்தின் 494-வது பிரிவின்படி, ஒரு நபர் தனது வாழ்க்கைத்துணை உயிருடன் இருக்கும் நிலையில் மற்றொருவரை திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அது "இரண்டாவது திருமணம்" என்ற குற்றமாகும் என நீதிமன்றம் தெரிவித்தது.
பெண் அளித்த புகாரில், கணவர் மற்றும் மற்றொரு பெண் "தவறான உறவில்" வாழ்கிறார்கள் என்ற தகவல் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அவர்கள் உண்மையில் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் புகாரில் இல்லை என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
இதுகுறித்து நீதிபதி ஆர்.நடராஜ் கூறியதாவது, ஒரு நபர் தனது வாழ்க்கைத்துணை உயிருடன் இருக்கும் போது மற்றொருவரை திருமணம் செய்து கொண்டால் மட்டுமே இந்திய குற்றச் சட்டம் 494-வது பிரிவு பொருந்தும். வெறும் உறவில் இருந்து வாழ்வது மட்டும் திருமணமாகக் கருதப்படாது." மேலும், அந்த பெண் தனது கணவர் மற்றொரு பெண்ணை எப்போது திருமணம் செய்தார், எந்த சூழலில் திருமணம் நடந்தது என்பதையும் புகாரில் குறிப்பிடவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதனால் அந்த குற்றச்சாட்டை சட்டரீதியாக நிரூபிக்க முடியாது என கூறப்பட்டது.
இந்த வழக்கில் கணவர், அவரது இரண்டு மகன்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்றொரு பெண் ஆகியோர் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுதாரர்களின் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் சிஆர் கோபாலசாமி, இந்திய குற்றச் சட்டத்தின் 494-வது பிரிவு கணவன் அல்லது மனைவி மீது மட்டுமே பொருந்தும்; அவர்களின் உறவினர்கள் அல்லது குழந்தைகள் மீது பொருந்தாது என்று வாதிட்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், "ஒருவரின் தவறான திருமணத்திற்காக அவருடைய உறவினர்கள் அல்லது ஆதரவு அளித்தவர்கள் மீது குற்றம் சாட்ட முடியாது" என்று தெரிவித்தது. அதனால் இந்த வழக்கில் மகன்கள் மற்றும் மற்றொரு பெண்ணுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் நீதிமன்றம் கூறியது.
மேலும், இரண்டாவது திருமண குற்றத்தில் ஐபிசி 109 (உதவி செய்தது) போன்ற பிரிவுகளையும் பயன்படுத்த முடியாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதனால், வழக்கை எடுத்துக்கொண்ட கீழமை நீதிமன்றம் சட்டத்தின் வரம்புகளை சரியாக ஆய்வு செய்யாமல் குற்றச்சாட்டை பதிவு செய்ததாகவும், அது தவறான முடிவாகும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்தது. இதன் அடிப்படையில், 73 வயது முதியவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த இரண்டாவது திருமண வழக்கை முழுமையாக ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
தூத்துக்குடி மாணவி மாயமான முதல் நாளே போலீஸ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? - ஐகோர்ட் எழுப்பிய கேள்வி -
ரோடு ஷோ விதிகள்.. தவெக தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் வழங்கிய ஐகோர்ட் -
வெளியானது IANS கருத்துக்கணிப்பு ரிசல்ட்: 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார்? -
ஸ்டன் ஆன விஜய்.. "80 சீட்+ துணை முதல்வர்" எல்லாம் ஓகே.. ஆனா ஒரு விஷயத்தை யோசிக்கும் தவெக தலைமை -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications