Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகாவில் 20க்கும் மேலான லோக்சபா தொகுதிகளை வெல்லும் பாஜக.. முக்கிய 3 காரணங்கள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: வரும் நாடாளுமன்ற தேர்தலில் தென்மாநிலங்களை பொறுத்தமட்டில் கர்நாடகாவில் பாஜக அதிக இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. அங்கு 20க்கும் அதிகமான தொகுதிகளை பாஜக வெல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் பின்னணியில் 3 முக்கிய காரணங்கள் உள்ளன. அதன் விபரம் வருமாறு:

கர்நாடகா.. தென்மாநிலங்களில் தனித்து பாஜகவால் அரியணை ஏறும் ஒற்றை மாநிலம் இதுதான். இருப்பினும் கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸிடம், பாஜக பறிகொடுத்தது. இருப்பினும் கூட கர்நாடகாவில் பாஜகவுக்கான கட்டமைப்பு என்பது ஒவ்வொரு கிராமங்களிலும் காங்கிரஸை போல் வலுவாகவே இருக்கிறது.

 Lok Sabha Election 2024: BJP will win over 20 Parliament Constituency in upcoming election due to these 3 main reasons

இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவை பொறுத்தமட்டில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த 2019 தேர்தலில் பாஜக 25 இடங்களில் வென்றது. காங்கிரஸ், ஜேடிஎஸ் தலா ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றனர்.

அதாவது காங்கிரஸ் சார்பில் பெங்களூர் புறநகர் தொகுதியில் துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் வெற்றி பெற்றார். ஹாசன் தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் பேரனும், முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வெல் ஜேடிஎஸ் சார்பில் வெற்றி பெற்றார். அதேபோல் மறைந்த நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா சுயேச்சையாகவும் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் தற்போது மீண்டும் கர்நாடகாவில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

தற்போது கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள நிலையில் வரும் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோல் கர்நாடகாவில் வென்ற இடங்களை தக்க வைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அந்த வகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, தேவேகவுடாவின் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. கடந்த சட்டபை தேர்தலில் பாஜக, ஜேடிஎஸ்ஸை காலி செய்த காங்கிரஸ் கட்சியை நாடாளுமன்ற தேர்தலில் வீழ்த்த இருகட்சிகளும் கரம் கோர்த்துள்ளன.

இத்தகைய சூழலில் தான் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 20க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். மேலும் கருத்து கணிப்புகளும் அதே முடிவை தான் சொல்கின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தாலும் கூட நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கான செல்வாக்கு குறையாமல் இருக்க 3 முக்கிய காரணங்கள் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல் காரணம்: கர்நாடகாவில் பாஜகவின் ஓட்டு வங்கி என்பது லிங்காயத் சமுதாயம் தான். இந்த சமுதாயத்தினர் வடகர்நாடகாவிலும், மத்திய கர்நாடகாவிலும் பரவி வாழ்கின்றனர். பாஜகவின் மூத்த தலைவர் எடியூரப்பா இந்த சமுதாயத்தை சேர்ந்தவர் தான். கடந்த பாஜக ஆட்சியில் எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்பட்டு அதே சமுதாயத்தை சேர்ந்தவரும், எடியூரப்பாவின் முதன்மை ஆதரவாளருமான பசவராஜ் பொம்மை முதல்வராக்கப்பட்டார். இருப்பினும் கூட கர்நாடகாவில் லிங்காயத் மக்களின் முகமாக இருந்த எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து இறக்கியதை அந்த சமுதாயத்தினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுதான் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

இதனை பாஜக மேலிடம் உணர்ந்தது. இதனால் தான் பாஜக மாநில தலைவராக இருந்த நளீன் குமார் கட்டீலுக்கு பதில் அந்த பொறுப்பில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் லிங்காயத் சமுதாயத்தினரை சமாதானப்படுத்தி அவர்களின் வாக்குகளை தங்கள் பக்கமே வைத்து கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. இது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பிளஸ் பாயிண்டாக அமையும். அதேபோல் ஜேடிஎஸ் கட்சியை எடுத்து கொண்டால் குமாரசாமி முதல்வராவார். அவர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்.

மேலும் தற்போது காங்கிரஸில் முதல்வராக இருக்கும் சித்தராமையா குருபா சமுதாயத்தை சேர்ந்தவர். வரும்காலத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளராக அறியப்படும் டிகே சிவக்குமார் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். அதன்படி லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவருக்க காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சியில் முதல்வராகும் வாய்ப்பு என்பது இல்லாத சூழல் உள்ளது. மாறாக பாஜகவில் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா வரும் காலத்தில் முதல்வராகலாம். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் விஜயேந்திராவுக்கு ஆதரவாக பாஜகவை வலுப்படுத்த வேண்டும் என்பதில் லிங்காயத் சமுதாயத்தினர் உறுதியாக உள்ளனர். இதனால் லிங்காயத் ஓட்டுகள் லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு கைக்கொடுக்கும்.

2வது காரணம்: கர்நாடகாவை பொறுத்தமட்டில் காங்கிரஸ், பாஜக ஆகியவை தான் மிகப்பெரிய கட்சிகளாக உள்ளன. மாநிலம் முழுவதும் அந்த கட்சிக்கு நல்ல கட்டமைப்பு உள்ளது. கிராமங்கள் தோறும் நிர்வாகிகள் உள்ளன. ஆனால் ஜேடிஎஸ்ஸை எடுத்து கொண்டால் ஒக்கலிகர் மக்கள் அதிகம் வசிக்கும் மைசூர், பெங்களூர் புறநகர், சிக்பள்ளாப்பூர், மண்டியா, ஹாசன் உள்ளிட்ட ஓல்டு மைசூர் மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்காக உள்ளது. இதுதவிர சில தொகுதிகளில் மட்டுமே ஜேடிஎஸ் கட்சி பலமாக உள்ளது. இத்தகைய சூழலில் சட்டசபை தேர்தலை பொறுத்தமட்டில் மக்கள் காங்கிரஸ், பாஜக என மாறிமாறி ஆட்சியில் அமர்த்துகின்றனர்.

ஆனால் நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் வலுவான பிரதமர் வேட்பாளரை கொண்ட கட்சிக்கு வாக்களித்து வருகின்றனர். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அல்லது ராகுல் ஆகியோரில் யார் வேண்டும் என்றால் பெரும்பாலானவர்கள் நரேந்திர மோடியை விரும்புகின்றனர். பாஜக கட்டுக்கோப்பான கட்சியாகவும், பிரதமர் மோடி பலம் வாய்ந்த தலைவராகவும் உள்ளார். மாறாக காங்கிரஸ் கட்சியில் இன்னும் கூட கோஷ்டி அரசியல் உள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க ராகுல் காந்தி விரும்பினாலும் மூத்த தலைவர்கள் இடையூறாக உள்ளன. மேலும் காங்கிரஸில் மூத்த தலைவர்களே கட்சி மாறுகின்றனர். அவர்களை தடுத்தும் நிறுத்துவதில் ராகுல் காந்தி தோல்வியடைந்துள்ளார்.

நாளை காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் கூட கூட்டணி அரசை தான் நடத்தும். அப்போதும் பிரச்சனையை சரிசெய்ய முடியாமல் காங்கிரசும், ராகுல் காந்தியும் திணறலாம். அந்த வகையில் பிரதமர் மோடியை சிறந்த தேர்வாக இருக்கும் என கர்நாடகா மக்கள் நம்புகின்றனர். அதோடு இயல்பாகவே நாடாளுமன்ற தேர்தலில் அந்த மக்கள் பாஜகவை தான் விரும்புகின்றனர். கடந்த 2009 தேர்தலில் பாஜக 18 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும், ஜேடிஎஸ் 2 இடங்களில் வென்றது. அதன்பிறகு 2014ல் பாஜக 17, காங்கிரஸ் 9, ஜேடிஎஸ் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2019ல் பாஜக 25, காங்கிரஸ், ஜேடிஎஸ் தலா ஒரு இடம், சுயேச்சை ஒரு இடத்தில் வென்றனர். அதன்படி வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் கர்நாடகா மக்களின் மனநிலை என்பது பாஜகவின் பக்கமே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

3வது காரணம்: காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் கோஷ்டி அரசியல் என்பது ஒன்றும் புதிது அல்ல. இதற்கு கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் விதிவிலக்கல்ல. கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் ரிசல்ட் வந்த நிலையில் முதல்வர் சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. அரசியல் அனுபவம், அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் செல்வாக்கு, அதிருப்தியாளர்களை அரவணைத்து செல்லும் குணம், சிறந்த நிதி மேலாண்மை, 5 ஆண்டு (2013-2018 காங்கிரஸ் ஆட்சியில்) முதல்வராக இருந்த அனுபவம் உள்ளிட்டவற்றால் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவி கிடைத்தது. டிகே சிவக்குமார் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை காத்து பலமுறை மேலிடத்துக்கு உதவி செய்து மேலிடத்தில் நல்ல பெயர் இருந்தாலும் கூட அவருக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு, சிபிஐ விசாரணை உள்ளிட்டவை நிலுவையில் உள்ளன. இதனை கருத்தில் கொண்டு அவருக்கு முதல்வர் பதவி வழங்கப்படவில்லை.

இருப்பினும் கூட இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் உள்ளது. ஆனால் 5 ஆண்டு முதல்வர் பதவியை அனுபவிக்க சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரும்புகின்றனர். இந்த ஒரு விஷயத்தில் வெளியே தெரியாமல் சித்தராமையா-டிகே சிவக்குமார் தரப்பினர் இடையே பிரச்சனை என்பது உள்ளது. தற்போது டிகே சிவக்குமார் துணை முதல்வர் பதவியோடு, கர்நாடகா காங்கிரஸ் தலைவர் பதவியிலும் உள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களை வென்று காட்ட வேண்டிய கட்டாயத்தில் டிகே சிவக்குமார் உள்ளார். இதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ஆனால் சித்தராமையா தரப்பு அதனை விரும்பவில்லை என கூறப்படுகிறது. டிகே சிவக்குமார் மாநில தலைவராக காங்கிரஸை அதிக இடங்களில் வெல்ல வைத்தால் அடுத்ததாக அவர் முதல்வர் பதவியை கேட்டு மேலிடத்துக்கு அழுத்தம் கொடுப்பார். இதனால் மேலிடமும் இறங்கி வரலாம். சித்தராமையாவுக்கு பதில் டிகே சிவக்குமாருக்கு முதல்வர் பதவி செல்லாம். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் சித்தராமையா மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் இருக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இந்த 3 காரணங்கள் தவிர சில நாட்களுக்கு முன்பு நடந்த ராஜ்யசபா தேர்தல் வென்றதை காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர். கர்நாடகா சட்டசபை கட்டடமான பெங்களூர் விதான சவுதாவில் நடந்த கொண்டாட்டத்தில் ‛பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷமிடப்பட்டது. அந்த கோஷத்தை எழுப்பியது யார்? என்பது பற்றி விசாரணை நடத்தி வரும் நிலையில் கர்நாடகா மேல்சபையில் அந்த கட்சியின் மூத்த தலைவரும், எம்எல்சியுமான பிகே ஹரிபிரசாத் ‛பாகிஸ்தான் பாஜகவுக்கு தான் எதிரி நாடு. எங்களுக்கு இல்லை' என கூறி சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

பொதுவாக பாஜகவினர் தங்களை தான் நாட்டுப்பற்று மிக்கவர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சீனா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டுவதை வழக்கமாக வைத்துள்ளது. இத்தகைய சூழலில் தான் தேர்தல் வரும் நேரத்தில் ‛பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷம், பிகே ஹரிபிரசாத் பேச்சு உள்ளிட்டவை மக்களிடம் காங்கிரஸ் மீதான பார்வையை மாற்றலாம். மேலும் பாஜக நிச்சயமாக இதனை கையில் எடுத்து பெரிய அளவில் பிரசாரம் செய்யும் என்பதால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயம் குறைந்தப்பட்சமாக 20க்கும் மேலான இடங்களிலும், அதிகபட்சமாக 25 இடங்கள் வரையும் வெல்லும் வாய்ப்புள்ளது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+