கர்நாடகா: ஏப்.26-ல் முதல் கட்ட தேர்தல்- களத்தில் 247 வேட்பாளர்கள்! இன்று மாலையுடன் ஓய்கிறது பிரசாரம்
பெங்களூர்: கர்நாடகாவில் ஏப்ரல் 26-ந் தேதி லோக்சபா தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைகிறது. கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
18-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் நடைபெற்றது. 2-ம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களின் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ந் தேதி நடைபெறுகிறது.

கர்நாடகாவின் 14 தொகுதிகள், கேரளாவின் 20 தொகுதிகள் என மொத்தம் 89 தொகுதிகளில் ஏப்ரல் 26-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. இத்தொகுதிகள் அனைத்திலும் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
கர்நாடகா முதல் கட்ட தேர்தல் களத்தில் மொத்தம் 247 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 21 பேர் பெண்கள். கர்நாடகாவின் மண்டியா லோக்சபா தொகுதியில் முன்னாள் முதல்வர் குமாரசாமி, பாஜக தேசிய இளைஞரணித் தலைவர் தேஜ்ஸ்வி சூர்யா, பெங்களூர் தெற்கு, பெங்களூர் புறநகரில் கர்நாடகா துணை முதல்வர் டிகே சுரேஷ், ஹாசனில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, மைசூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக மைசூர் மகாராஜா யதுவீர் உடையார் உள்ளிட்டோர் களம் காண்கின்றனர்.
கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்கிறது. கர்நாடகாவில் பிரதமர் மோடி 4 முறை பிரசாரம் செய்துள்ளார். கர்நாடகாவில் ராகுல் காந்தி ஒரு முறை பிரசாரம் மேற்கொண்டார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜூன கார்கே, தீவிர பிரசாரம் செய்தார். மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர். 91 வயதிலும் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக முன்னாள் பிரதமர் தேவகவுடா பிரசாரம் செய்தார். பிரதமர் மோடியுடன் ஒரே மேடையில் தேர்தல் பிரசார கூட்டத்திலும் தேவகவுடா பங்கேற்றார்.
-
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications