பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அடிபட்ட சிங்கத்தோட மூச்சு.. யாருக்கு பிரச்சாரம் செய்யும் தெரியுமா? தேர்தல் களத்தில் கேஜிஎப் ஹீரோ!

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த கேஜிஎப் படத்தின் ஹீரோ யஷ் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்து இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Yash Campaigns in mandya: தேர்தல் களத்தில் கேஜிஎப் கதாநாயகன் யஷ்- வீடியோ

    பெங்களூர்: சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த கேஜிஎப் படத்தின் ஹீரோ யஷ் தேர்தல் பிரச்சாரத்தில் குதித்து இருக்கிறார். கர்நாடகாவில் இவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

    கர்நாடக சினிமா உலகில் அதிக பட்ஜெட் படங்கள் வருவது மிகவும் குறைவு. ஆனால் அந்த வழக்கத்தை மீறி சில வாரங்களுக்கு முன் பிரம்மாண்டமாக வெளியான படம்தான் கேஜிஎப்.

    இந்த படம் கர்நாடகா மட்டுமில்லாமல் இந்தியா முழுக்க பெரிய ஹிட் அடித்தது. அதோடு இல்லாமல் இந்த படத்தில் ராக்கி கதாபாத்திரத்தில் நடித்த ஹீரோ யஷ் இந்தியா முழுக்க வைரலானார்.

    யார் வேகத்தடை.. நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா?... மோடிக்கு மம்தா பானர்ஜி சவால் யார் வேகத்தடை.. நேருக்குநேர் விவாதிக்கத் தயாரா?... மோடிக்கு மம்தா பானர்ஜி சவால்

    தேர்தல் பிரச்சாரம்

    தேர்தல் பிரச்சாரம்

    இந்த நிலையில் லோக்சபா தேர்தலுக்காக தற்போது கர்நாடகாவில் மாண்டியா தொகுதியில் யஷ் பிரச்சாரம் செய்து வருகிறார். இவர் காங்கிரஸ் - மஜத கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருகிறார் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. இளம் நடிகர் ஒருவர் ஆளும் கட்சியை எதிர்த்து பிரச்சாரம் செய்வது அங்கு பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    யாருக்காக

    யாருக்காக

    இந்த மாண்டியா தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாகத்தான் யஷ் பிரச்சாரம் செய்கிறார். சுமலதா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா என்று பல மொழிகளில் 200 படங்கள் வரை நடித்த புகழ்பெற்ற நடிகை. இவர் தற்போது அரசியலில் குதித்து உள்ளார்.

    என்ன முக்கியம்

    என்ன முக்கியம்

    இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், யஷ் தற்போது கர்நாடகா முதல்வர் குமாரசாமியின் மகன் நிகிலுக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார். நிகில் மாண்டியா தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்துதான் யஷ் கடந்த ஒருவாரமாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்.

    பாஜக ஆதரவு

    பாஜக ஆதரவு

    சுமலதாவிற்கு அந்த தொகுதியில் பாஜக ஆதரவு அளித்துள்ளது. அங்கு பாஜக தனது வேட்பாளரை நிறுத்தவில்லை. அதே சமயம் தர்ஷன் உள்ளிட்ட இன்னும் சில கன்னட நடிகர்களும் சுமலதாவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இது நிகிலுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.இதனால் தற்போது கர்நாடகா முதல்வர் குமாரசாமி யஷ் மீது கடுமையான விமர்சனங்களை வைத்துள்ளார்.

    என்ன நடக்கும்

    என்ன நடக்கும்

    இதனால் இவர்கள் இருவர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு உள்ளது. இதன் விளைவா யஷ் கர்நாடகா முழுக்க பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் என்றும் கூறப்படுகிறது. வளர்ந்து வரும் இளம் நடிகர் ஒருவர் ஆளும் கட்சியை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்வது கர்நாடகாவில் பெரிய பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

    English summary
    Lok Sabha elections 2019: The KGF fame hero Yash supports Sumalatha in Mandya sparks angry in Cong-JDS alliance.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X