பஸ்ஸிலும் கொடூரம்.. ஓடும் பேருந்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த இளைஞர்.. அடுத்து நடந்த ஷாக்!
பேருந்து புறப்பட தொடங்கியது முதலாக அந்த இளைஞர் மதுபோதையில் உளறிக் கொண்டு வந்துள்ளார். தனது நண்பர்களிடம் போன் செய்து சத்தமாக அநாகரீகமான வார்த்தைகளில் அவர் பேசி வந்துள்ளார்.
பெங்களூர்: ஓடும் பேருந்தில் பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் கழித்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் விமானத்தில் இதேபோன்ற அருவருக்கத்தக்க சம்பவம் நடந்த நிலையில், தற்போது பேருந்திலும் அப்படியொரு சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
பொது இடங்களில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்கும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மறக்க முடியுமா?
அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. இதில் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (34) என்பவரும் இருந்தார். ஆரம்பம் முதலாகவே மதுவை அதிகம் குடித்ததால் உச்சக்கட்ட போதையில் இருந்த அவர், சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்தார். சிறுநீர் கழித்த பிறகும், தனது மர்ம உறுப்பை காட்டியபடி அவர் நின்று கொண்டிருந்தார். பின்னர் சக பயணிகள் திட்டியதை அடுத்து, அவர் அங்கிருந்து நகன்றார். இதுதொடர்பான புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்க நிறுவனத்தில் உயர் பதவியில் இருந்த அவர் பணிநீக்கமும் செய்யப்பட்டார்.

இப்போது பேருந்தில்..
இந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலைகள் ஓய்வதற்குள்ளாக, மற்றொரு அதிர்ச்சி சம்பவம் கர்நாடகாவில் நடந்திருக்கிறது. கர்நாடகா மாநிலம் விஜய்புராவில் இருந்து மங்களூருக்கு நேற்று முன்தினம் படுக்கை வசதி கொண்ட அரசு சொகுசு பேருந்து சென்றது. அப்போது பேருந்தில் உள்ள ஒரு கீழ் படுக்கையில் 20 வயது மதிக்கத்தக்க கல்லூரி மாணவி ஒருவர் பயணித்தார். அதற்கு மேலே உள்ள படுக்கையில் 32 வயதுள்ள இளைஞர் இருந்தார். பேருந்து புறப்பட தொடங்கியது முதலாக அந்த இளைஞர் மதுபோதையில் உளறிக் கொண்டு வந்துள்ளார்.

போதையில் சேட்டை
தனது நண்பர்களிடம் போன் செய்து சத்தமாக அநாகரீகமான வார்த்தைகளில் அவர் பேசி வந்துள்ளார். பின்னர் சக பயணிகள் சத்தம் போட்டதை அடுத்து, அவர் அமைதியாக இருந்துள்ளார். இந்நிலையில், மதிய உணவுக்காக ஓட்டல் ஒன்றில் பேருந்து நின்றது. இதையடுத்து, பயணிகள் அனைவரும் மதிய உணவு அருந்த சென்றனர். அந்த இளைஞர் போதையில் இருந்ததால் உறங்கியபடியே இருந்தார். இந்த சூழலில், பயணிகள் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் பேருந்தில் ஏறியுள்ளனர். அந்தக் கல்லூரி மாணவியும் தனது இருக்கையில் அமர்ந்தார்.

சிறுநீர் கழித்து அட்டுழியம்
அப்போது திடீரென மேல் இருக்கையில் இருந்து மாணவி மீது தண்ணீர் படவே அவர் அங்கிருந்து நகன்றிருக்கிறார். அப்போதுதான், மேலே உள்ள இளைஞர் அங்கிருந்தபடியே கீழ் இருக்கையை நோக்கி சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தது அவருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் கூச்சலிடவே, அங்கு வந்த பேருந்து நடத்துநர் அந்த இளைஞரை பாதி வழியில் கீழே இறக்கிவிட்டார். மேலும், அந்த பெண்ணை மற்றொரு இருக்கையில் அமர செய்தார். இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அந்தப் பெண் புகார் ஏதும் கூறாத போதிலும், கர்நாடகா போக்குவரத்துக் கழகம் அந்த இளைஞர் மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
-
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications