கதற கதற கபளீகரம்... நித்தியானந்தா சாமியாரின் சீடர் பகீர் வீடியோ!
நித்யானந்தா மீது சீடர் மீடூவில் புகார் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video

பெங்களூரு: இப்பதான் கொஞ்ச நாளா எந்த பஞ்சாயத்தும் இல்லாமல் மேஜிக் ஷோ நடத்தி தனது சிஷ்யைகளை பரவசப்படுத்தி வந்து கொண்டிருக்கிறார் நம்ம நித்யானந்தம். ஆனால் அதற்குள் அவர் இன்னொரு ஏழரையில் சிக்கி கொண்டுள்ளார்.
இந்த ஏழரையை கூட்டியது அவரது சீடர்தான் என்பது ஆச்சரியம். மீ டூ என்பது பெண்களுக்கான புகார் அமைப்பு என்று நாம் நினைத்து கொண்டிருந்தால், இந்த விவகாரத்தில் குதித்து மீ டூவில் நானும் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று சீடர் பகீர் கிளப்பியுள்ளது மற்றொரு ஆச்சரியம்!

சரிவிகித ஆபாசம்
ஆண்டாள் பிரச்சனையில் நித்யானந்தாவின் ஆண், பெண் சீடர்கள் என சரிவிகித ஆபாசத்துடன் பேசிய வீடியோ வெளியிட்டது தெரிந்த சமாச்சாரம்தான். அதிலும் குறிப்பாக நித்யானந்தாவின் ஆண் சீடர் "வீழ்வேனென்று நினைத்தாயோ" என பாரதி வரிகளை ரொம்ப யோக்கியமாக பேச தொடங்கி, போக போக, வைரமுத்துவை கீழ்த்தரமான விமர்ச்சித்து, சாக்கடை வார்த்தைகளை அள்ளி தெளித்தாரே அதே சீடர்தான்!
வீடியோ வெளியீடு
தோற்றத்துக்கும் பேசும் வார்த்தைகளுக்கும் சம்பந்தமே இல்லாமல் நம் காதுகளை இறுக்கமாக மூடிக் கொள்ளும் அளவுக்கு கொச்சையான தடித்த வார்த்தைகளை கொட்டி தீர்த்தாரே... அதேசீடர்தான் தற்போது மீது மீடூ புகாரையும் அளித்துள்ளார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அச்சமில்லை அச்சமில்லை
"அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பது இல்லையே" என்ற கருத்தை மனதில் வைத்து மக்களுக்கு ஒரு உண்மையை தெளிவுப்படுத்துகிறேன் என்று ஆரம்பிக்கிறார். நான் நித்யானந்தா சாமியால 2014-ம் ஆண்டு மே மாதம் அனைவரின் முன்னிலையிலும் கபளீகரம் செய்யப்பட்டேன்.

கபளீகரம்
2015-ல் "எனர்ஜி தர்ஷன்" என்று சொல்லி என் நெத்தியில் கை வைத்து என்னை கதற கதற கொடுமையாக ஆக்கிரமிச்சாரு பரம்ஹம்ச நித்யானந்தா. அது என்ன தேதி-ன்னு எனக்கு சரியா தெரியல, நினைவு இல்லை. ஆனால் நான் சொல்வதெல்லாம் உண்மை. அப்போ நடந்த விஷயத்தை இப்போ வந்து நான் ஏன் சொல்கிறேன் என்றால், எனக்கு இப்பதான் தைரியம் வந்திருக்கு.

தைரியம்
மக்களுக்கும் இப்பதான் விழிப்புணர்வு எல்லாம் வந்திருக்கு. அதனாலதான் சொல்றேன். என்னை போலவே பல ஆண்கள், பெண்கள் இந்த பரமஹம்ச நித்யானந்தாவால் பெரிய அளவில் கபளீகரம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மீ டூ மூலமாக இதை எல்லாருக்கும் தெரியபடுத்துகிறேன்.. நித்யானந்தம்" என்று அந்த வீடியோவில் சொல்லி முடித்து உள்ளார்.

பாரதியார் வரிகள்
தான் உண்டு, தன் சிஷ்யைகள் உண்டு என்று மேஜிக் ஷோ நடத்தி வரும் நித்தியானந்தா இதற்கு என்ன பதில் தரப்போகிறாரா தெரியவில்லை. ஆனால் கூவம் நிறைந்த பாஷையிலும் நாறி போன விவகாரத்திலும் பாரதியாரின் வரிகளை கொண்டு வந்து பேசுவதைதான் நம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications