ரூ.7.11 கோடி ஏடிஎம் பணம் கொள்ளை.. வருமான வரித்துறையினர் போல் நடித்து பெங்களூரில் துணிகரம்
பெங்களூர்: பெங்களூரில் பட்டப்பகலில் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்து செல்லப்பட்ட ரூ.7.11 கோடியை ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் எப்படி நடந்தது? என்பது பற்றி திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் ஜேபி நகரில் தனியாருக்கு சொந்தமான வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு சொந்தமான ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணியை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தான் இன்று மாலையில் வங்கியில் இருந்து ரூ.7.11 கோடி பணத்தை எடுத்து கொண்டு தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் வேனில் ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்ப சென்று கொண்டிருந்தனர்.

இவர்களின் வேன் ஜெயநகர் அசோக் பில்லர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ஒரு கார் குறுக்கே வந்து வழிமறித்தது. அந்த காரில் இருந்து இறங்கியவர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி, ஆவணங்களை சரிபார்க்க வேண்டும். தங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதையடுத்து ஏடிஎம்களில் பணம் நிரப்ப சென்ற ஊழியர், துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் மற்றும் டிரைவர் அமைதியாக நின்றனர். அவர்களை தங்களின் காரில் ஏற்றிய கும்பல், பணப்பெட்டியையும் காரில் ஏற்றியது. அதன்பிறகு அவர்களை டெய்ரி சர்க்கிள் அருகே இறக்கிவிட்ட கும்பல் ரூ.7.11 கோடியுடன் எஸ்கேப் ஆகி உள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக பணத்தை கொள்ளையடித்த கும்பல் பன்னரகட்டா ரோட்டின் வழியாக சென்று இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் அந்த பகுதிகளில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் தற்காலிகமாக போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனையை தொடங்கி உள்ளனர். பட்டப்பகலில் வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி ஏடிஎம்களில் பணம் நிரப்பும் நிறுவனத்தை சேர்ந்தவர்களை ஏமாற்றி ரூ.7.11 கோடியை தூக்கி சென்ற சம்பவம் பெங்களூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications