பெங்களூரில் அதிகம் பேசப்படும் மொழிகள் இதுதான்.. தமிழுக்கு எத்தனையாவது இடம்னு பாருங்க!
பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் பல்வேறு மொழிகளை பேசும் மக்கள் வசிக்கின்றனர். அதிகமாக கன்னடம் பேசுபவர்கள் இருக்கிறார்கள். கன்னடம் போலவே தெலுங்கு இருந்தாலும், அங்கு 2வது அதிகம் பேசப்படும் மொழி தெலுங்கு கிடையாது.
பெங்களூரு, தென்னிந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் இங்கு வேலைக்காக வருகிறார்கள். எனவே இயல்பாகவே பெங்களூரு பல மொழிகளை பேசும் நகரமாக இருக்கிறது. பெங்களூர் மாவட்டத்தில் 107 மொழிகள் பேசப்படுவதாக சொல்லப்படுகிறது. நாட்டின் அதிக மொழிகள் பேசப்படும் மாவட்டம் இதுதான்.

22 அட்டவணைப்படுத்தப்பட்ட மொழிகளும், 84 அட்டவணைப்படுத்தப்படாத மொழிகளும் பேசப்படுகின்றன. அதிகமானோர் கன்னடம் பேசுகிறார்கள். மொத்த மக்கள் தொகையில் 44% கன்னடம் பேசுகிறார்கள். இரண்டாவது இடத்தில் தமிழ் இருக்கிறது.
தமிழ் - 15%
தெலுங்கு - 14%
உருது - 12%
இந்தி - 6%
மலையாளம் - 3%
மராத்தி - 2%
கொங்கணி - 0.6%
பெங்காலி - 0.6%
ஒடியாக - 0.5%
இது தவிர, வாஞ்சோ, சங்கதம், கோந்த், போஜ்புரி போன்ற மொழிகளை பேசுபவர்களும் இங்கு வசிக்கின்றனர்.
ஏன் தமிழ் இரண்டாவது இடத்தில் உள்ளது?
பெங்களூர் தமிழ்நாட்டின் வட மாவட்ட இளைஞர்களுக்கு ஈஸியான வேலை வாய்ப்பு பகுதியாக இருக்கிறது. ஒருவர் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு வந்து வேலை செய்வதை விட, தருமபுரியை சேர்ந்தவர் பெங்களூருக்கு சென்று வேலை செய்வது எளிதானது. எனவே வட மாவட்ட மக்கள் வேலைக்காக பெங்களூரை தேர்ந்தெடுக்கின்றனர்.
அதேபோல சென்னையில் டெக் நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்திற்கும், பெங்களூரில் டெக் நிறுவனங்கள் கொடுக்கும் சம்பளத்திற்கும் வித்தியாசம் அதிகம். இதுவும் பெங்களூரை நோக்கி தமிழர்கள் செல்ல காரணமாக இருக்கிறது. இதனால் பெங்களூரில் மற்ற மொழிகளை விட தமிழ் மொழி அதிகம் பேசப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications