Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வருணா.. சித்தராமையாவை எதிர்த்து மகன் விஜயேந்திரா போட்டியா? ‛நோ’ சொன்ன எடியூரப்பா! பின்னணி இதுதான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமயைா மைசூர் மாவட்டம் வருணாவில் போட்டியிடும் நிலையில் அவரை எதிர்த்து பாஜகவில் மாஜி முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா களமிறங்குவதாக தகவல்கள் வெளியான நிலையில் அதனை ஏற்க எடியூரப்பா மறுத்துள்ளார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் ஏப்ரல் 13ல் தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஏப்ரல் 21ம் தேதி மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற உள்ளது. ஏப்ரல் 24 மனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும்.

கர்நாடகத்தை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியாக காங்கிரஸ், ஜேடிஎஸ் மற்றும் புது வரவாக ஆம்ஆத்மி என நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. இதுதவிர பிற சிறிய கட்சிகளும் தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளன.

வேட்பாளர்கள் அறிவிப்பு

வேட்பாளர்கள் அறிவிப்பு

தற்போது வரை காங்கிரஸ் சார்பில் முதற்கட்டமாக 124 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஜேடிஎஸ் சார்பில் 93 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலும், ஆம்ஆத்மி சார்பில் ஏற்கனவே 80 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. இன்று 2வது கட்டமாக 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டள்ளனர். இதன்மூலம் ஆம்ஆத்மி கட்சி 140 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

வருணாவில் சித்தராமையா போட்டி

வருணாவில் சித்தராமையா போட்டி

காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாக கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் அங்கு காங்கிரஸ் தலைவர்கள் இடையேயான கருத்து வேறுபாடு பிரச்சனையை ஏற்படுத்தும் என்பதால் சொந்த தொகுதியான வருணாவில் அவர் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருணா தொகுதி எம்எல்ஏவாக இருந்த சித்தராமையாவின் மகன் யதீந்திரா இந்த முறை போட்டியிட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையே தான் கோலார் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என சித்தராமையா கேட்டுள்ளார். இதில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

பாஜகவில் எடியூரப்பாவின் மகன்?

பாஜகவில் எடியூரப்பாவின் மகன்?

இதற்கிடையே தான் சித்தராமையா வருணா தொகுதியில் போட்டியிட உள்ளதால் அவரை எதிர்த்து பாஜகவில் பலமான வேட்பாளர் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனையில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 2வது மகன் விஜயேந்திராவை அங்கு களமிறக்கலாம் என கருதப்பட்டது. வீரசைவ லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் அங்கு வெற்றியை தீர்மானிக்கும் வகையில் இருக்கும் நியைில் அது விஜயேந்திராவுக்கு கைக்கொடுக்கும் என பாஜக மேலிடம் கணக்கு போட்டது. இதனால் பாஜக சார்பில் வருணா தொகுதியில் விஜயேந்திரா போட்டியிடுவார் என்ற தகவல்கள் வெளியாகின.

போட்டியில்லை என்ற எடியூரப்பா

போட்டியில்லை என்ற எடியூரப்பா

இதற்கிடையே தான் இன்று எடியூரப்பா மைசூரில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த வேளையில் வருணா தொகுதியில் சித்தராமையாவை எதிர்த்து மகன் விஜயேந்திரா போட்டியிடுகிறாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எடியூரப்பா, ‛‛ இந்த விஷயத்தில் கட்சி மேலிடத்திடம் பேசியுள்ளேன். எந்த காரணத்தை கொண்டும் விஜயேந்திராவை வருணா தொகுதியில் போட்டியிடலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரை வருணாவில் போட்டியிட வைக்க கட்சியினர் விரும்புகின்றனர். இருப்பினும் கூட விஜயேந்திரா சிகாரிப்புரா தொகுதியை விட்டு வரமாட்டார். அவர் அங்கு தான் போட்டியிடுவார்'' என்றார்.

என்ன காரணம்?

என்ன காரணம்?

எடியூரப்பா வரும் தேர்தலில் போட்டியில்லை என அறிவித்துள்ளார். இதனால் விஜயேந்திராவை வருணா தொகுதியில் களமிறக்க அவர் விரும்பவில்லை. ஏனென்றால் தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் மகன் விஜயேந்திராவுக்கு அரசியல் பயணத்தை துவக்கி வைத்துவிட வேண்டும் என்பதில் எடியூரப்பா உறுதியாக உள்ளார். இந்த சூழலில் எடியூரப்பா போட்டியிட்ட அவரது கோட்டையான சொந்த தொகுதி சிகாரிப்புராவை விட்டுவிட்டு வேறு மாவட்டத்தில் உள்ள வருணா தொகுதியில் மாஜி முதல்வர் சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட வைப்பதை எடியூரப்பா விரும்பவில்லை. ஒருவேளை விஜயேந்திரா தோற்றால் அரசியல் எதிர்காலம் கேள்விகுறியாகலாம் என எடியூரப்பா நினைக்கிறார். இதனால் தான் மகன் விஜயேந்திராவை தான் போட்டியிட்ட சிகாரிப்புராவில் களமிறக்குவதில் அவர் ஆர்வமாக உள்ளார்.

சிகாரிப்புரா எங்குள்ளது?

சிகாரிப்புரா எங்குள்ளது?

சிகாரிப்புரா என்பது சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதியாகும். இந்த தொகுதி எடியூரப்பாவின் கோட்டையாகும். அதோடு அவரது சொந்த தொகுதியாகும். தற்போது அவர் அரசியலில் ஓய்வு அறிவித்துள்ள நிலையில் அந்த தொகுதியில் தனது மகன் விஜயேந்திரா போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+