தமன்னா சர்ச்சையால் பிரபல சோப் கம்பெனிக்கு அடித்த லக்.. கொட்டிய பண மழை.. மொத்தமும் லாபம் தான்!
பெங்களூர்: நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் அம்மாநில அரசின் கர்நாடகா சோப்ஸ் & டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் மைசூர் சாண்டல் சோப்பை தயாரித்து விற்பனை செய்கிறது. இந்த நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமன்னாவை விளம்பரத் தூதராக நியமித்தது சர்ச்சையாக வெடித்தது. ஆனால், இந்தச் சர்ச்சையே ஒரு சாதனைக்குக் காரணமாக அமைந்துள்ளது.
கர்நாடகாவில் பல்வேறு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. அப்படி அங்கு அரசு நிறுவனம் தயாரிக்கும் சோப் தான் மைசூர் சாண்டல் சோப்.. இது கர்நாடகாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. 109 வருடங்கள் பழமையான இந்தச் சோப்பை கர்நாடக அரசுக்குச் சொந்தமான கர்நாடகா சோப்ஸ் & டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KS&DL) நிறுவனமே தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

தமன்னா
இந்த சோப் கடந்த மே மாதம் திடீரெனச் சர்ச்சையில் சிக்கியது. அதாவது கர்நாடகா சோப்ஸ் & டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது நடிகை தமன்னாவை பிராண்ட் அம்பாசிடராக நியமித்தது. கன்னட நடிகையை நியமிக்காமல் வட இந்திய நடிகையை நியமித்ததாகச் சொல்லி அப்போது கன்னட ஆர்வலர்களை அதிருப்தி அடைந்தனர்.. அப்போது கே.எஸ்.டி.எல் இது தொடர்பாகப் பல்வேறு விளக்கங்களை எல்லாம் கொடுக்க வேண்டி இருந்தது.
இந்தச் சர்ச்சை அடங்குவதற்குள், KS&DL நிறுவனம் இப்போது புதிய சாதனையைப் படைத்துள்ளது என்றே சொல்லலாம். அதாவது கடந்த மே மாதத்திற்கு நிறுவனத்தின் டார்கெட் ரூ.150 கோடியாக இருந்தது. ஆனால், அதைத் தாண்டி ரூ.186 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்தது. இது 24% வளர்ச்சியாகும்.
மொத்தமும் லாபம்
கடந்த சில ஆண்டுகளாகவே கே.எஸ்.டி.எல் நிறுவனம் வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகிறது. 2020-21ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024-25 நிதியாண்டில் அதன் விற்பனை இரட்டிப்பாகி ரூ.1,780 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல அப்போது நிகர லாபம் ரூ.113 கோடியாக இருந்தது. அது 4 மடங்கு அதிகரித்து ரூ.415 கோடியாகவும் உயர்ந்துள்ளது.
மார்க்கெட்டிங் குறிப்பாக ஆன்லைன் மார்க்கெட்டிங் காரணமாகவே விற்பனை அதிகரித்தாக அதன் நிர்வாக இயக்குநர் பிரசாந்த் பி.கே.எம் தெரிவித்தார். மைசூர் சாண்டல் விற்பனையில் 80% தென்னிந்தியாவிலிருந்து வருகிறது. இதில் ஆந்திரப் பிரதேசம் மிகப் பெரிய மார்கெட்டாக உள்ளது. இப்போது அடுத்த கட்டமாக வட இந்தியாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர்.
விற்பனையை அதிகரிக்கத் திட்டம்
2028ஆம் ஆண்டுக்குள் ஆண்டு வருவாயை ரூ.5,000 கோடியாக உயர்த்த மைசூர் சாண்டல் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், வட கர்நாடகாவில் உள்ள விஜயபுராவில் புதிய ஆலை அமைக்க ரூ.250 கோடி முதலீடு செய்யப்படத் திட்டமிட்டுள்ளனர். மேலும், மைசூர் சாண்டல் தவிர வேறு பொருட்களின் விற்பனையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
அடுத்து ஹாலிவுட் ஸ்டார்
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே பான்-இந்திய ஸ்டராக அறியப்படும் தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இது குறித்து கர்நாடகாவின் தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் கூறுகையில், "நாங்கள் மைசூர் சாண்டல் சோப்பை தேசிய அளவில் எடுத்துச் செல்கிறோம். எதிர்காலத்தில் சர்வதேச அளவிலும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். அப்போது நமக்கு ஒரு ஹாலிவுட் பிரபலம் விளம்பரத் தூதராகத் தேவைப்படலாம்" என்றார்.
அரசு நிறுவனமாக இருந்தாலும் மைசூர் சாண்டல் சரியாகத் தயாரிக்கப்பட்டு மார்கெட்டிங் செய்யப்படுவதாலேயே அது தொடர்ந்து லாபம் ஈட்டி வருகிறது. வட இந்திய மார்கெட்டை மைசூர் சாண்டல் கைப்பற்றினால் அதன் விற்பனை பல மடங்கு அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications