பாஜக 200 இடங்களை தாண்டாது! தேர்தலுக்கு பின் அமைய போகும் "கூட்டணி" ஆட்சி.. வந்து விழுந்த பரபர கணிப்பு
பெங்களூர்: லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது அதே சமயம் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் போதிய இடங்கள் கிடைக்காது என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
'அப்கி பார் 400-பார்' என்ற பா.ஜ.க.வின் முழக்கத்திற்கு எதிராக பேசிய சித்தராமையா, பாஜக கட்சிக்கு எதிராக நாட்டில் கடுமையான மக்கள் மனநிலை உள்ளது. இதனால் பாஜக இல்லாத ஒரு கூட்டணி ஆட்சிதான் தேசிய அளவில் உருவாகும் என்று சித்தராமையா கணித்துள்ளார்.

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையாது. தேசிய அளவில் பாஜகவிற்கு எதிராக ஒரு எதிர்ப்பு மனநிலை உள்ளது. அமைதியான வாக்காளர் புரட்சி ஒன்று நடந்து வருகிறது. முடிவுகள் வரும்போது பார்க்கலாம். இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது.
ஆனால் லோக்சபா தேர்தலில் இந்திய கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது அதே சமயம் மத்தியில் ஆட்சி அமைக்க பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் போதிய இடங்கள் கிடைக்காது. இதனால் தேர்தலுக்கு பின்பாக இந்தியா கூடுதல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கும்.
எனக்கு கிடைத்த தகவலின்படி, பாஜக 200-க்கும் மேற்பட்ட இடங்களைத் தாண்ட கூட வாய்ப்பு இல்லை என்று பாஜகவிற்கு நெருக்கமான அமைப்பு நடத்திய சர்வே காட்டுகிறது. அவர்கள் தனியாக ஆட்சிக்கு வரமாட்டார்கள். அதற்க்கு வாய்ப்பே இல்லை.
தேர்தலுக்குப் பிறகு அரசியல் கட்சிகள் மீண்டும் கூட்டணி அமைக்கும். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெற்கில் உள்ள அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து ஆட்சி அமைக்க உள்ளனர். இதுதான் நடக்கும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பாஜகவின் 370 டார்கெட்: பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 லோக்சபா தேர்தலில் 370 இடங்களை வெல்வதை லட்சிய இலக்காக நிர்ணயித்துள்ளது. 2019 ஐ விட 67 இடங்கள் அதிகம் வெல்வோம் என்று பாஜக தலைவர்கள் மேடைக்கு மேடை அறிவித்து வருகின்றனர். ஆனால் பாஜகவால் இந்த இலக்கை அடைய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பாஜக தனியாக 370 இடங்களை வெல்வதன் மூலம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 400 ரன்களை கடக்க வாய்ப்பாக அமையும் என்பதால் பாஜக இந்த மாபெரும் இலக்கை நிர்ணயம் செய்துள்ளது. . மக்களவையில் 543 இடங்கள் உள்ளன, பாஜக 2014 மற்றும் 2019 இல் முறையே 282 மற்றும் 303 இடங்களை வென்றது.
370 என்ற இலக்கை.. ஜம்மு காஷ்மீரின் 370 நீக்கத்துடன் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவினர் இணைத்து பேசி வருகின்றனர்.ஆனால் கடந்த முறை வென்றதில் இருந்து கூடுதலாக 67 இடங்களை சேர்ப்பது என்பது பாஜகவிற்கு மிகவும் கடினமான பணியாக இருக்கலாம்.
பாஜகவிற்கு இலக்கு கஷ்டம்; பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று பெரும்பாலான அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக்கொண்டாலும், 370 இடங்கள் என்பது அக்கட்சிக்கு மிகவும் கடினமான ஒன்றாகும். 2019ல் பாஜக வெற்றி பெற்ற மாநிலங்களில் எல்லாம் அதே மாதிரி வெற்றியை மீண்டும் பாஜக பதிவு செய்ய வேண்டும்.
கடந்த முறை குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்ற இடங்களிலும் வெற்றியை உறுதி செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் புதிதாக 67 இடங்களை வெல்ல வேண்டும். கடந்த முறை வென்ற இடங்களில் சில தொகுதிகளை இழக்கும் பட்சத்தில் கூடுதலாக புதிய இடங்களில் வெல்ல வேண்டும்.
தற்போது லோக்சபா தேர்தலில் பாஜக 443 மக்களவைத் தொகுதிகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 100 இடங்களிலும் போட்டியிடுகிறது. இதில் தென்னிந்தியாவில் மட்டும் பாஜக சின்னங்கள் பின்வரும் தொகுதிகளில் போட்டியிடுகின்றன,
தமிழ்நாடு - 19
கேரளா - 18
தெலுங்கானா - 13
ஆந்திரா - 06
பஞ்சாப் - 13
உத்தரகாண்ட்- 02
வடகிழக்கு- 02
மேற்கு வங்கம்- 16
பாஜகவின் இந்த 90 தொகுதிகளில்தான் பாஜகவிற்கு கடுமையான போட்டியே நிலவும். இதில் கர்நாடக தவிர மற்ற இடங்களில் பாஜகவிற்கு அவ்வளவு சாதகமான சூழ்நிலை இல்லை. இந்த 90ல் பாஜக 20- 25 இடங்களில் வென்றால் கூட மீதமுள்ள 373 இடங்களில் அப்படியே பாஜக தனியாக வெல்வது என்பதற்கு நம்பர்ஸ் ரீதியாக வாய்ப்பு குறைவு.
373ல் 370ல் எப்படி பாஜகவினரால் வெற்றி பெற முடியும்?
குஜராத், உத்தரகாண்ட், பீகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஜார்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக க்ளீன் ஸ்வீப் அல்லது கிட்டத்தட்ட க்ளீன் ஸ்வீப் செய்தது. இந்த முறை ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவில் பாஜக கடுமையான சவால்களை எதிர்கொள்ளக்கூடும். ராஜஸ்தானில் 25 இடங்களிலும் கடந்த முறை பாஜக வெற்றி பெற்றது. லோக்சபா தேர்தல் இந்த முறை பாஜகவிற்கு பெரும் சோதனையாக இருக்கும், போட்டியாக இதில் சில மாநிலங்களில் இருக்கும்.
கடந்த முறை மகாராஷ்டிராவில், 48 இடங்களில் 41 இடங்களை பாஜக கைப்பற்றியது, சிவசேனாவையும் என்சிபியையும் பிளவுபடுத்தியும் கூட அங்கே எதிர்க்கட்சி கூட்டணி வலுவாக இருக்கிறது. அப்படி இருக்க கடந்த முறை வென்றதன் விட பாஜக கூடுதலாக 67 இடங்களை வெல்வது சந்தேகம்தான். பாஜகவின் வெற்றி உறுதியாக இருப்பதாக கணிப்புகள் சொன்னாலும் 370 இடங்களை பெற்று வெல்லுமா என்பது விவாதமாக இருக்கிறது.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா!












Click it and Unblock the Notifications