Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சசிகலா மீது குற்றம்சாட்டிய ஐஜி ரூபாவுக்கு மீண்டும் சிக்கல்.. சக அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் சசிகலா அடைக்கப்பட்டு இருந்த போது, சிறை விதிகளை மீறி சொகுசு வசதிகளை அனுபவிப்பதாக கூறி பரபரப்பு தகவல்களை வெளியிட்ட காவல் அதிகாரியான ரூபா மீது சக பெண் போலீஸ் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்து இருக்கிறார். தலைமை செயலாளரிடம் பெண் ஐஏஎஸ் அதிகாரியான வர்த்திகா இந்த குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.

கர்நாடக உள்நாட்டு பாதுகாப்புத் துறையில் உள்ள தனது அறையில் இருந்து முக்கிய ஆவணங்களை திருடியதாக ஐ.ஜி. ரூபா மீது டி.ஐ.ஜி. வர்த்திகா குற்றச்சாட்டு கூறியுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளரிடம் புகாரும் அளித்துள்ளார்.

IG Rupa Karnataka Police

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா மற்றும் இளவரசி உள்ளிட்டோருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதன்படி, கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். சிறையில் சசிகலாவுக்கு விதிகளை மீறி பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டதாக அப்போது சிறைத்துறை டிஐஜியாக இருந்த ரூபா பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகின.

இந்த விவகாரத்தை வெளிக்கோண்டு வந்த போது நாடு முழுவதும் பரபரப்பாக காவல் அதிகாரி ரூபா பெயரும் அடிபட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவத்திற்கு பின்னர் காவல்துறையில் பல்வேறு பணிகளுக்கு ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்த நிலையில், காவல்துறை அதிகரி ரூபா மீது டிஐஜி வர்த்திகா என்பவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். இது குறித்த விவரம் வருமாறு:-

ஆவணங்களை திருடி செல்போனில் புகைப்படம்

கர்நாடக உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஐஜியாக தற்போது ரூபா பணியாற்றி வருகிறார். அதேபோல உள்நாட்டு பாதுகாப்புத்துறை நிர்வாக பிரிவு டிஐஜி பணியாற்றி வர்த்திகா என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வர்த்திகாவின் அறையில் இருந்த ஆவணங்கள் திருடுபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வர்த்திகா விசாரணை நடத்தினார். இந்த விசாரணையில், ஐஜி ரூபா 3 போலீஸ் அதிகாரிகள் மூலம் அந்த ஆவணங்களை திருடியது கண்டறியப்பட்டதாக சொல்லப்படுகிறது.

டிஐஜி வர்த்திகாவின் அலுவலக அறையில் இருந்த ஆவணங்களை திருடியதுடன், அதை செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டதாக சொல்லப்படுகிறது. ஐஜி ரூபாவின் இந்த செயலால் கோபம் அடைந்த வர்த்திகா, கடந்த சனிக்கிழமை கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் ஷாலினி ரஜனிசிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், வர்த்திகா கூறியதாவது:-

இதுவரை நடவடிக்கை இல்லை

ஐஜி ரூபா தனக்கு கீழ் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகளான மல்லிகார்ஜுன், மஞ்சுநாத், கிரண் ஆகிய 3 பேரை என்னுடைய அறைக்கு அனுப்பி ஆவணங்களை திருடியுள்ளார். அது மட்டும் இன்றி அந்த ஆவணங்களை செல்போனில் புகைப்படமும் எடுத்துள்ளார். அந்த ஆவணங்களை வைத்து போலி ஆவணங்கள் தயாரித்து என் மீது முறைகேடு புகார் அளிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது.

இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ஷாலினி ரஜனிஸ், இதுவரை எந்தவித நடவடிக்கையும் என்று சொல்லப்படுகிறது. ஏஐ.ஜி. ரூபா மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி ரோகிணி சிந்தூரி இடையேயான மோதல் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில் டிஐஜி வர்த்திகாவின் அறையில் இருந்து ஐஜி ரூபா ஆவணங்களை திருடியதாக கூறப்படும் சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+