பிரதமர் மோடி பேச்சால் புது சர்ச்சை! கர்நாடகாவில் இந்தியில் பேசிவிட்டு தமிழகத்தில் மட்டும் ஆங்கிலமா?
பெங்களூர்: கர்நாடகாவில் பிரதமர் மோடி இந்தி மொழியில் உரையாற்றிவிட்டு சில மணிநேரங்களில் தமிழ்நாட்டில் ஆங்கிலத்தில் பேசியது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
பிரதமர் மோடி இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூர் சென்றடைந்தார். பின்னர் பெங்களுரில் உள்ள கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சுமார் ரூபாய் 5,000 கோடி மதிப்பில் பெங்களுரூவின் கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது ஆண்டு ஒன்றுக்கு 2-5 கோடி பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது இந்த புதிய முனையம் மூலம், 5-6 கோடி பயணிகள் பயனடைவார்கள்.

கெம்பே கவுடா சிலை திறப்பு
மேலும் பெங்களூர் நகரத்தை உருவாக்கிய மாமன்னர் கெம்பேகவுடாவின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அவரது 108 அடி உயர சிலையையும் பிரதமர் மோடி திறந்து வைத்தார். அத்துடன் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயில் ஆகியவற்றை பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் கொடி அசைத்தும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

கர்நாடகாவில் இந்தி
இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்று நீண்ட உரையாற்றினார். பிரதமர் மோடி இந்தி மொழியில் பேசினார். பிரதமர் மோடியின் இந்தி மொழி பேச்சு மொழிபெயர்க்கப்படவும் இல்லை. பொதுவாக பிரதமர் மோடி இந்தி பேசாத மாநிலங்களுக்கு செல்லும் போது ஆங்கிலத்தில் உரையாற்றுவது வழக்கம். ஆகையால் பிரதமர் மோடி, கர்நாடகாவில் ஆங்கிலத்தில் உரையாற்றுவார் என எதிர்பார்த்தனர். ஆனால் மோடி வழக்கம் போல இந்தியில் பேசினார். இத்துடன் பிரதமர் மோடியின் பயணம் முடிவடைந்திருந்தால் சர்ச்சை வெடித்திருக்கிறார்.

தமிழகத்தில் ஆங்கிலம்
கர்நாடகாவில் இந்தியில் பேசிய கையோடு தமிழ்நாட்டுக்கு சென்றார் பிரதமர் மோடி. திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, ஆங்கிலத்தில் உரையாற்றினார். இதுதான் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது.

சமூக வலைதளங்களில் சர்ச்சை
தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகாவில் இந்தி மொழியிலும் தமிழகத்தில் ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி பேசியிருப்பதை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்யபப்ட்டு வருகிறது. கர்நாடகாவில் இந்தியில் பிரதமர் மோடி பேசிய போது, மொழிபெயர்ப்பு வசதி கூட செய்யப்படவில்லை என்கிற ஆதங்கமும் வெளிப்படுத்தப்படுகிறது. இது தொடர்பான விவாதங்களில், கன்னடர்கள் பரந்த மனப்பான்மையுடன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது எனவும் தமிழகத்தைப் போல கர்நாடகாவில் மொழி உணர்வு குறைந்துவிட்டது எனவும் இருதரப்புமான கருத்துகள் குவிந்து கொண்டிருக்கின்றன.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications