பெங்களூரில் உயர்த்தப்படும் சொத்து வரி.. இனிமேல் வீட்டு வாடகை புதிய உச்சம் தொடும்.. ஷாக்கிங்!
பெங்களூர் : பெங்களூர் மாநகராட்சி சார்பாக புதிய சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் குடியிருப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்காக வாடகைக்கு வீடுகளை, கட்டிடங்களை எடுத்தவர்கள் கடுமையாக சிரமப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரி மதிப்பின் அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே அதிக வாடகை செலுத்தும் மக்கள் இன்னும் கூடுதல் வாடகையை செலுத்தும் வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய முறை மூலம் கிட்டத்தட்ட 100% வரி உயர்த்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. வெவ்வேறு வகை வணிக கட்டிடங்களுக்கு கட்டணம் மூன்று முதல் ஐந்து மடங்கு வரை உயர்த்தப்படுகிறது.

புதிய முறையின்படி, வாடகைக்கு உள்ள குடியிருப்புகள் தற்போது செலுத்தும் வரித் தொகையை விட இரண்டு மடங்கு செலுத்த வேண்டும். அதாவது 100 % வரி உயர்கிறது.
அதே நேரத்தில் விருந்தினர் தங்குமிடம், மாநாட்டு அரங்குகள் அல்லது மால்கள் போன்ற வாடகை சொத்துகளுக்கு தற்போதைய வரி கட்டணமே தொடரும். ஏர் கண்டிஷனர் அல்லது எஸ்கலேட்டர்கள் இருப்பது போன்ற கட்டிடங்கள் புதிய வரி கட்டமைப்பில் கணக்கிடப்படாது. இதனால் அதற்கான கட்டணங்கள் குறையாது.
வாடகை உயரும் : சொத்து வரி மதிப்பின் அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே அதிக வாடகை செலுத்தும் மக்கள் இன்னும் கூடுதல் வாடகையை செலுத்தும் வாய்ப்புகள் உள்ளன. அதாவது இப்போது செலுத்தும் வாடகையை விட 2- 4 ஆயிரம் வரை கூட வாடகை உயரும் வாய்ப்புகள் உள்ளன.
வழிகாட்டுதல் மதிப்பு 33 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வணிகர்கள் மற்றும் சொத்து உரிமையாளர்கள் வரி 40 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றனர். இதனால் கடைகளுக்கான வாடகையும் அதிகரிக்கும். 30 ஆயிரம் வாடகை செலுத்துபவர்கள் 33 ஆயிரம் அல்லது 34 ஆயிரம் வாடகை செலுத்தும் கட்டாயம் ஏற்படலாம்.
:
அதிகம்: ஏற்கனவே சென்னை, மும்பை, ஹைதராபாத் மற்றும் புனே போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடுகையில், 2023 ஆம் ஆண்டில் பெங்களூருவில் உள்ள வீட்டு வாடகைகள் மிக அதிகமாக இருந்ததாகவும், தொடர்ந்து உயர்ந்ததாகவும் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.
No Broker's Real Estate Report 2023 மற்றும் கன்சல்டன்சி நிறுவனமான Anarock இன் படி, பெங்களூரில் முக்கிய பகுதிகளில் உள்ள வீடுகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக வாடகை உயர்ந்துள்ளது. நோ ப்ரோக்கர் தனது அறிக்கையில், பெங்களூரு மற்றும் மும்பையின் நில உரிமையாளர்களில் ஏழு சதவீதம் பேர் 2023ல் வாடகையை 30 சதவீதத்துக்கும் மேல் உயர்த்தியுள்ளனர் .
பெங்களூரில் கணக்கெடுக்கப்பட்ட 52 சதவீத நில உரிமையாளர்கள் வாடகை மூலம் கிடைக்கும் வருமானத்தையே முழுமையாக நம்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் உயரும்: இப்போது பெங்களூர் மாநகராட்சி சார்பாக புதிய சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால் குடியிருப்பு மற்றும் வணிக நோக்கங்களுக்காக வாடகைக்கு வீடுகளை, கட்டிடங்களை எடுத்தவர்கள் கடுமையாக சிரமப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சொத்து வரி மதிப்பின் அதிகரிப்பு காரணமாக ஏற்கனவே அதிக வாடகை செலுத்தும் மக்கள் இன்னும் கூடுதல் வாடகையை செலுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications