கல்யாண பெண்ணை அலேக்காக மணமகன் தூக்கியபோது.. இப்படியும் நடக்குமா? மறக்க முடியாத பெங்களூர் போட்டோஷூட்
பெங்களூர்: மனைவியை ஆசை ஆசையாக அலேக்காக தூக்கி மகிழ்ச்சியில் கொண்டாடினார் மணமகன்.. அப்போதுதான் இந்த எதிர்பாராத விபத்து ஏற்பட்டுவிட்டது. பெங்களூரில் நடந்த இந்த சோக சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் தீவிரமான சிகிச்சையை பெற்று வருகிறார்.. சம்பவத்தின் பரபரப்பும், அதிர்ச்சியும் இன்னமும் திருமண வீட்டிலிருந்து அகலவில்லை. என்ன நடந்தது பெங்களூரில்?
திருமண ஜோடிகள் திருமணத்திற்கு முன்பு வித்தியாசமாக போட்டோ ஷூட் எடுப்பது தற்போது சாதாரண விஷயமாகிவிட்டது. சில சமயம் எல்லைமீறிய ஆபாசமாகவும் வெட்டிங் ஷூட் நடத்தப்பட்டுவிடுகிறது..

சில சமயம், ஆபத்தான முறையிலும் வெட்டிங் சூட் நடத்துகிறார்கள்.. சமீபத்தில். தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு ஜோடி சுடுகாட்டு தீம்மில் போட்டோ ஷூட்டை நடத்தியிருந்தனர்.
பெங்களூர் மணமக்கள்
இந்நிலையில், பெங்களூரில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் விக்கி மற்றும் பியா... இவர்கள் இருவருமே பெங்களூரை பூர்வீகமாக கொண்டவர்கள்.. இவர்கள் வெளிநாட்டிலிருக்கும்போதே, ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.. பிறகு, ஒருகட்டத்தில், திருமணம் செய்து கொள்ளவும் இந்த காதலர்கள் முடிவு செய்தனர்.
இதற்காக சொந்த ஊரான பெங்களூருவுக்கு வந்திருந்தனர்.. அங்குள்ள திறந்தவெளி தோட்டத்தில் திருமணத்துக்கு முந்தைய "போட்டோ ஷூட்" நடத்த ஆசைப்பட்டுள்ளனர்.. இதில், சற்று காஸ்ட்லியாக இந்த போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்து, அதற்காக தடபுடல் ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்..
வண்ண புகை குண்டுகள்
குறிப்பாக, வண்ண புகை குண்டுகள் வெடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டன. போட்டோ ஷூட்டிற்காக மணமக்கள் இருவருமே அலங்காரம் செய்து கொண்டனர்.. பிறகு ஒவ்வொரு போட்டோவாக எடுக்க துவங்கினார்கள்.. அதில், மணப்பெண்ணை மணமகன் தூக்கி கொண்டாடுவதை போட்டோவாக எடுக்க ஆசைப்பட்டனர்.
அதன்படியே, மகிழ்ச்சி சந்தோஷத்தில், புதுபெண்ணை மணமகன் அலேக்காக தூக்கி கொண்டாடியபோது திடீரென அந்த நேரத்தில் வண்ணப்புகை குண்டுகள் பல வண்ணங்களில் வெடித்து சிதற துவங்கின..
வலியால் துடித்த மணமகள்
அப்போது, எதிர்பாராதவிதமாக புகைகுண்டு ஒன்று மணப்பெண்ணின் மீது விழுந்து வெடித்தது.. இதனால் வலி தாங்க முடியாமல் மணப்பெண் அலறி துடித்தார். இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
எனினும், தீக்காயம் பட்டதில், மணப்பெண்ணின் முகுது, வயிறு, இடைப்பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், அவரது தலைமுடியும் தீயில் கருகி இருந்தது. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை தந்து வருகிறது.. இதுதொடர்பான வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி ஒரேநாளில் 45 லட்சம் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
-
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications