Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛இறந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை’.. கர்நாடகாவை அலறவிட்ட விளம்பரம்! மணமகனாக போட்டா போட்டி! பின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இறந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மாப்பிள்ளை வேண்டும் என்று பத்திரிகையில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதனை பார்த்ததும் அந்த பெண்ணுக்கு மணமகனாக போட்டி போட்டிக்கொண்டு விளம்பரம் கொடுத்தவரை செல்போனில் தொடர்பு கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக மணப்பெண், மணமகன் வேண்டும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் கர்நாடகாவில் வினோத சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Newspaper adveritsment sekking groom for deceassed girl who pased away 30 years ago

அதாவது இறந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய இறந்த ஆண் வேண்டும் என்று செய்தித்தாளில் வெளிவந்த விளம்பரம் தான் ‛டாக் ஆப் தி டவுன்' ஆக மாறியுள்ளது. அதுமட்டுமின்றி அந்த விளம்பரத்தை பார்த்த பலரும் விளம்பரம் செய்த நபரை தொடர்பு கொண்டது மற்றொரு வினோதமான செய்தியாகும்.

இந்த சம்பவம் எங்கே நடந்தது? அதன் பின்னணி என்ன? என்பது பற்றி இங்கே பார்ப்போம். அதாவது கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூரை சேர்ந்த பெண் குழந்தை கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துபோனார். தற்போது அவர் குடும்பம் தொடர்ந்து பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இந்நிலையில் தான் பிரச்சனையில் இருந்து மீண்டு வர அவர்கள் பலரிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.

அப்போது தான் ஒருவர், ‛‛உங்கள் வீட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பெண் குழந்தை இறந்தது. அந்த பெண் குழந்தைக்கு இப்போது 30 வயது ஆகிறது. அந்த குழந்தைக்கு திருமணம் செய்து வைத்தால் உங்களின் பிரச்சனைகள் தீரும். திருமணம் என்பது அதே 30 வயது கொண்ட இறந்த ஆணுடன் செய்து வைக்க வேண்டும்'' எனக்கூறியுள்ளார். இதனை அந்த குடும்பத்தினர் உண்மை என நம்பினர்.

இதையடுத்து அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் கூறி 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த அந்த பெண் குழந்தைக்கு திருமணம் செய்ய முயன்றனர். ஆனால் இறந்த நபர் கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் பத்திரிகையில் விளம்பரம் ஒன்றை கொடுத்தனர். அந்த விளம்பரத்தின் தலைப்பு என்பது, ‛‛இறந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை வேண்டும்'' என கூறப்பட்டு இருந்தது. அதோடு, அந்த பெண்ணின் ஜாதியை குறிப்பிட்டு, ‛‛30 ஆண்டுக்கு முன்பு அந்த பெண் இறந்துவிட்டார். அதேஜாதியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நபர் மணமகனாக வேண்டும். இருவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். தயவு செய்து தொடர்பு கொள்ளுங்கள்'' என்று செல்போன் எண்ணை கொடுத்து இருந்தனர்.

இந்த விளம்பரம் இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்டுத்தியது. இதனை சிலர் வரவேற்ற நிலையில் இன்னொரு தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மூடநம்பிக்கை என விமர்சனமும் செய்தது. இது ஒருபுறம் இருக்க அந்த விளம்பரத்தை பார்த்து 50 பேர் வரை செல்போன் எண்ணை தொடர்பு கொண்டுள்ளனர். இதில் 20 செல்போன் எண்கள் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து ஒருவர் மணமகனாக தேர்வு செய்யப்பட உள்ளார். அதன்பிறகு பேய் திருமணம் நடைபெற உள்ளது.

கர்நாடகாவில் இந்த விளம்பரம் வெளியாகி உள்ள பகுதி புத்தூர் ஆகும். இது துளுநாடு எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு இறந்த நபர்களுக்கு திருமணம் செய்து வைப்பது ஒன்றும் புதிதல்ல. தங்களின் குடும்பத்தில் பிறந்து திருமணத்துக்கு முன்பே இறந்தால் அவர்களுக்கு திருமண சடங்குகள் நடத்தப்படும். ஏனென்றால் இந்த பகுதியில் வசிக்கும் சில சமுதாய மக்களிடம் வினோத நம்பிக்கை உள்ளது.

அதாவது பொதுவாக ஒருவர் இறந்தால் சொர்க்கம், அல்லது நரகத்துக்கு செல்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் இங்குள்ளவர்களுக்கு அதில் நம்பிக்கை இல்லை. மாறாக இறந்தாலும் கூட அந்த நபர்கள் தங்களின் குடும்பத்துடனே வசிப்பதாக நம்புகின்றனர். இதனால் தான் அவர்கள் திருமணத்துக்கு முன்பே குடும்பத்தில் யாரேனும் இறந்தால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+