குளிரில் உறையப்போகும் பெங்களூர்.. வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக குறையப்போகுது.. மக்களே உஷார்
பெங்களூர்: பெங்களூர் நகரின் இரவு நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக குறைந்து மக்களை வாட்டி வதைக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
நம் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதத்தில் குளிர் அதிகரிக்கும். அதேபோல் டிசம்பர் மாதம் வந்துவிட்டால் பனிப்பொழிவும் பல இடங்களில் தொடங்கி விடும். இதற்கு பெங்களூருவும் விதிவிலக்கல்ல.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் குளிர் பெங்களூரில் பனிப்பொழிவு மற்றும் குளிர் மக்களை வாட்டி வதைக்கும். இந்த ஆண்டும் பெங்களூர் தப்பவில்லை. நவம்பர் மாதம் வரை நார்மலாக இருந்து வந்த குளிர் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது.
குறிப்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து குளிர் அதிகரித்து வருகிறது. பெங்களூர் நகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸாக கடந்த வாரம் இருந்தது. இந்த வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது. இன்னும் சொல்லப்போனால் பெங்களூரில் அடுத்த வாரத்தில் 12 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது: ‛‛அடுத்த சில நாட்கள் சென்னையில் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் குளிர் அலை உள்ளது. இது பெங்களூருவின் வெப்பநிலையை குறைக்கும். காலை நேரத்தில் பனிமூட்டம் இருக்கும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி வானிலை ஆய்வு மையத்தின் சிஎஸ் பட்டீல் கூறுகையில், ‛‛ பெங்களூர் நகரின் வெப்பநிலை இந்த வாரம் இன்னும் குறைய உள்ளது. இந்த வாரத்தில் இரவு வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸ் முதல் 14 டிகிரி செல்சியஸ்க்குள் இருக்கலாம். தெளிவான வானம், வறண்ட காற்று, வடகிழக்கு காற்று உள்ளிட்டவற்றால் பெங்களூரில் குளிர் தற்போது அதிகரித்துள்ளது'' என்று கூறியுள்ளார்.
பெங்களூரில் டிசம்பர் மாதத்தில் இரவு நேரத்தில் வெப்பம் 12 டிகிரி செல்சியஸ் வரை குறைவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பும் நடந்துள்ளது. குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பெங்களூர் நகரின் இரவு நேர வெப்பநிலை 12 டிகிரி செல்சியஸாக மாறியுள்ளது. இதுதான் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து பெங்களூரில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலையாகும்.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
செல்போன் ஸ்விட்ச் ஆஃப்.. கர்நாடக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பெங்களூர் எம்எல்ஏ மாயம்.. தமிழ்நாட்டில் பதுங்கல்? -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications