பெங்களூரில் பல வருடங்கள் வாழ்ந்த பிறகு கன்னடம் கற்காமல் இருப்பது நல்லதல்ல.. ஸ்ரீதர் வேம்பு
பெங்களூர்: கன்னடம் என் தாய் மொழி கிடையாது.. ஆனால் நான் பெங்களூர் வந்த பின்னர் கன்னடம் கற்று பேச முயற்சிக்கிறேன் என்று பெண் ஊடகவியலாளர் கூறிய கருத்தை வரவேற்றுள்ள சோஹோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு.. உங்கள் கருத்தை ஏற்கிறேன்.. பெங்களூரை உங்கள் சொந்த ஊராக மாற்றினால், நீங்கள் கன்னடம் கற்க வேண்டும், உங்கள் குழந்தைகள் கன்னடம் கற்க வேண்டும். பெங்களூரில் பல வருடங்கள் வாழ்ந்த பிறகு அப்படிச் செய்யாமல் இருப்பது நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.
இந்தி என்பது தேசிய மொழி இல்லை என்பதையும், கர்நாடாகவிற்கு வந்தால் கன்னடம் கற்று பேச வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.
ஏனெனில் பெங்களூரில் இந்தி தெரிந்தாலே போதும் என்கிற நிலை மெல்ல மெல்ல மாறி வருவதால் தங்கள் மொழியை பாதுகாக்க அவர்கள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த சூழலில் இந்தி தேசிய மொழி என்று கூறி டீசர்ட் அணிந்த இரண்டு பேர் போஸ் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் பெங்களுரில் நடந்ததாக அல்லது எங்கு நடந்தது என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை.. எனினும் இதற்கு கன்னட மக்கள் கடும் எதிர்வினையாற்றி வருகிறார்கள். எந்த ஊருக்கு செல்கிறோமோ, அந்த ஊரின் தாய்மொழியை கற்க வேண்டும் என்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் பரவி வருகிறது. அந்த வகையில் பிரபல ஆங்கில ஊடகமான மணி கண்ட்ரோலின் துணை நிர்வாக ஆசிரியர் சந்திரா ஸ்ரீகாந்த் கன்னட மொழிக்கு ஆதரவாக கருத்தினை பதிவிட்டார்.
அவர் வெளியிட்ட பதிவில், "வெளிநாட்டிற்கு வேலைக்கு போகும் போது ஆங்கிலத்தில் இருந்து பிரஞ்சு, ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலத்தில் இருந்து இத்தாலி மொழியை கற்பதற்கு புத்தகங்களை வாங்குவதற்கு முன் மக்கள் ஒரு நிமிடம் கூட யோசிக்க மாட்டார்கள், ஆனால் இந்தியாவில் உள்ளூர் மொழியைக் கற்க முயற்சி செய்யுங்கள். உள்ளூர் மொழிக்கு மரியாதை அளித்து நடந்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் சொன்னால், கடவுளே பேசக்கூடாது என்று சொன்னது போல் நடந்து கொள்வார்கள்.. . எனக்கு கன்னடமே தெரியாது என்று பல ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருப்பவர்களும் உண்டு.

ஆனால் என்னுடைய தாய்மொழி கன்னடம் அல்ல, ஆனால் நான் இங்கு வாழ்ந்த கடந்த பத்தாண்டுகளில் கன்னட மொழியை கற்க வேண்டும் என்று முடிவு செய்தேன். எனது கன்னடம் சரியானது அல்ல, இன்னும் முழு வாக்கியங்களுடன் பேசுவதற்கு நான் போராடி வருகிறேன்.. ஆனால் இப்படி என்னால் முடிந்த முயற்சி செய்வதற்காக மக்கள் மிகவும் பாராட்டுகிறார்கள்" என்று கூறினார். இந்த கருத்தை கன்னட மொழி பேசும் பலரும் பாராட்டி வருகிறார்கள். கருத்தை அமோதித்து வருகிறார்கள்.
இதனிடையே இந்த கருத்தை வரவேற்றுள்ள ஹோகோ சிஇஓ ஸ்ரீதர் வேம்பு.. உங்கள் கருத்தை ஏற்கிறேன்.. பெங்களூரை உங்கள் சொந்த ஊராக மாற்றினால், நீங்கள் கன்னடம் கற்க வேண்டும், உங்கள் குழந்தைகள் கன்னடம் கற்க வேண்டும். பெங்களூரில் பல வருடங்கள் வாழ்ந்த பிறகு அப்படிச் செய்யாமல் இருப்பது நல்லதல்ல.. பிற மாநிலங்களில் இருந்து வரும் சென்னையில் உள்ள எங்கள் பணியாளர்களிடம்.. இங்கு வந்த பிறகு தமிழ் கற்க முயற்சி செய்யுமாறு அடிக்கடி கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறினார்.
இதற்கு எதிர்வினைகளும் வந்துள்ளது. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விகளைஅப்படியே பார்ப்போம்.. " ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் கன்னடத்தை எப்போது, எங்கு கற்றுக்கொள்வார்? எளிதாக கற்றுக்கொடுக்கும் இடங்கள் என்ன?
இரண்டாது கேள்வி. நகரத்தில், பெரும்பாலானவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியும், ஆட்டோ/கேப்கள் கூட இப்போது ஆங்கிலம் இந்தி சாதாரணமாக பேசப்படுகிறது. அது தெரியாவிட்டாலும் எளிதாக போய் வர முடியும்.
மொழிகளுக்காக ஏற்படும் எதிர்வினைகள், அச்சுறுத்தல்கள் போன்றவற்றுக்குப் பதிலாக, கார்ப்பரேட் வளாகங்களுக்குள்ளேயே கன்னட வகுப்புகளை அரசாங்கம் வழங்க வேண்டும் (அதற்காக கார்ப்பரேட் நிறுவனத்திடம் கட்டணம் வசூலிக்கலாம்) இதனால் அனைவரும் அடிப்படை மொழியைப் பெற வாய்ப்பு உள்ளது. 30 நிமிட வகுப்பிற்கு திட்டமிடலாம். மற்ற பயிற்சிகளைப் போலவே நிலை 1, 2, 3 சான்றிதழ் வழங்கலாம். மொழியை கற்பதை வேடிக்கையாகவும் எளிதாகவும் ஆக்குங்கள். அப்படி செய்தால் உள்ளூர் மொழியை கற்கும் விஷயத்தில், பயம் மற்றும் அச்சுறுத்தல்களை காட்டி சிரமப்பட வேண்டிய தேவை இருக்காது. நான் மொழிகளை நேசிக்கிறேன், ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேலாக, கற்றுக்கொள்வதற்கான எந்த இடத்தையும் கண்டுபிடிக்கவில்லை.. இது வசதியானது, அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் நகர்ப்புறங்களில் எளிதில் பழகுவது அவசியம்" என்று கூறினார்.












Click it and Unblock the Notifications