Bangalore: "என் சாவுக்கு ஓலா CEO-தான் காரணம்!" 28 பக்க கடிதம் எழுதி வைத்து பெங்களூர் ஊழியர் தற்கொலை
பெங்களூர்: ஓலா நிறுவன ஊழியர் அரவிந்த், தனது சாவுக்கு எங்கள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) பவிஷ் அகர்வால், உயரதிகாரிகள்தான் காரணம் என எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டதை அடுத்து பெங்களூர் போலீஸார், ஓலா அதிகாரிகள் சிலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.

பெங்களூரை சேர்ந்த 38 வயதான ஊழியர் அரவிந்த். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் பெங்களூர் கோரமங்களாவில் உள்ள ஓலா நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி அரவிந்த், சிக்கலசந்திரா எனும் பகுதியில் உள்ள தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மகாராஜா அக்ராசென் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிகிச்சை பலனின்றி பலி
ஆனால் அங்கு சிகிச்சை பலனில்லாமல் அவர் இறந்துவிட்டார். தகவலறிந்த போலீஸார் அரவிந்தின் வீட்டிற்கு வந்து சோதனை செய்தனர். அப்போது அங்கு அவர் தான் கைப்பட எழுதிய தற்கொலை கடிதம் கைப்பற்றப்பட்டது. 28 பக்கங்களை கொண்ட இந்த கடிதத்தில் தான் தற்கொலை செய்து கொண்டது ஏன் என்பது குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஓலா நிறுவனத்தின் பவீஷ் அகர்வால், உயரதிகாரிகள் சுப்ரதா குமார் தாஸ் உள்ளிட்டோர் எனக்கு அதிக பணி பலுவை கொடுத்தனர்.
ஊதியம்
இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. எனது ஊதியம், ஊக்கத் தொகையையும் பிடித்து வைத்துள்ளனர். இதனால் என்னால் நிம்மதியாக பணியாற்ற முடியவில்லை. தொடர்ந்து எனக்கு மன ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வந்ததால் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன் என அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிர்ச்சி
அரவிந்த்தின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், பவீஷ் அகர்வால் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். தற்கொலை கடிதத்தில் அரவிந்த் குறிப்பிட்டுள்ள நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு அவரது சகோதரர் அஸ்வின் கண்ணன் புகார் அளித்துள்ளார்.
இரு நாட்கள் கழித்து
மேலும் தனது சகோதரன் அரவிந்த் இறந்து இரு நாட்கள் கழித்து அவரது வங்கிக் கணக்கிற்கு ரூ 17.46 லட்சம் ரூபாய் ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என புகாரில் கொடுத்துள்ளார். இதையடுத்து பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையில் சுப்ரதா குமார் தாஸ், பவீஷ் அகர்வால் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓலா விளக்கம்
இதுகுறித்து ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அளித்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: எங்கள் பெங்களூர் நிறுவன ஊழியர் அரவிந்த் தற்கொலை செய்து கொண்டது எங்களுக்கு மனவேதனையை கொடுக்கிறது. அவர் பணி செய்த மூன்றரை ஆண்டுகளில் அவர் மீது உயரதிகாரிகளின் துன்புறுத்தல்கள் குறித்தோ, ஊதியம் பிடித்தம் குறித்தோ எதையும் எங்களிடம் தெரிவிக்கவில்லை.
ரத்து செய்ய கோர்ட்டுக்கு போன ஓலா
மேலும் அரவிந்திற்கும் நிறுவனத்தின் தலைமை அதிகாரி பவீஷ் அகர்வால் உள்ளிட்டோருக்கும் இடையே எந்த நேரடி தொடர்பும் இல்லை. அவருடைய முழு பணப்பலன்களை அவரது குடும்ப நலனுக்காக செலுத்திவிட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பவீஷ் அகர்வாலுக்கு எதிரான வழக்குப் பதிவை ரத்து செய்யக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் அணுகியுள்ளது. மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஓலா நிறுவன ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான உண்மையான காரணம் குறித்து போலீஸார், அரவிந்துடன் பணிபுரிந்த நபர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications