பிராமணியம் குறித்து.. சர்ச்சைக்கிடமாக பேசிய கன்னட நடிகர்.. பிராமண அமைப்பு வழக்கு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்; பிராமணியத்தை வேரறுப்போம் என்று டிவிட் செய்ததற்காக கன்னட நடிகர் சேட்டன் குமார் மீது பிராமண முன்னேற்ற அமைப்பு போலீசில் புகார் அளித்துள்ளது.

கன்னட நடிகர் சேட்டன் குமார், சினிமாவை தாண்டி அரசியல் தொடர்பான கருத்துக்களை அதிகம் தெரிவிக்க கூடியவர். ரணம், அதிரதா உள்ளிட்ட பல கன்னட படங்களில் இவர் நடித்துள்ளார். டிவிட்டரில் தொடர்ந்து சமூக பிரச்சனைகள் குறித்தும், முற்போக்கு சிந்தனைகள் குறித்தும் போஸ்ட் செய்ய கூடியவர்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் செய்த டிவிட் ஒன்று சர்ச்சையானது. பிராமண ஆதிக்கம் குறித்து சேட்டன் குமார் செய்த டிவிட் சர்ச்சையாகி உள்ளது.

கருத்து

கருத்து


சேட்டன் குமார் செய்துள்ள டிவிட்டில், டாக்டர் அம்பேத்கார் மற்றும் பெரியாரின் கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்., அதில், பிராமணியம் என்பது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை மறுக்க கூடியது... நாம் பிராமணியத்தை வேரறுக்க வேண்டும் என்று டாக்டர் அம்பேத்காரின் கருத்தை குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, மக்கள் எல்லோரும் சமமாகப் பிறந்தாலும், பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்றும், மற்ற அனைவரும் தீண்டத்தகாதவர்கள் என்றும் சொல்வது முற்றிலும் முட்டாள்தனம். இது ஒரு பெரிய புரளி, என்று பெரியாரின் கருத்தையும் மேற்கோள் காட்டி சேட்டன் குமார் டிவிட் செய்து இருந்தார்.

புகார்

புகார்

இந்த நிலையில் இவரின் டிவிட்டை பார்த்து கொதித்து போன பெங்களூர் பிராமண முன்னேற்ற அமைப்பு சார்பாக அதன் தலைவர் சச்சிதானந்த மூர்த்தி சேட்டன் குமார் மீது பெங்களூர் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் சேட்டன் குமார் மீது இது தொடர்பாக இன்னும் எப்ஐஆர் பதியப்பட்டதா என்று விவரம் வெளியாகவில்லை.

விசாரணை

விசாரணை

இது தொடர்பாக விரைவில் விசாரிக்கப்படும் என்று போலீசார் பிராமண முன்னேற்ற அமைப்பிடம் உறுதி அளித்துள்ளனர். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி அளித்த சேட்டன் குமார், நான் சொன்ன கருத்துக்கள் உண்மையானது. நான் உண்மையான விஷயங்களை மட்டுமே குறிப்பிட்டு இருக்கிறேன்.

சமத்துவம்

சமத்துவம்

சமூக பொருளாதார அல்லது பாலினம் ரீதியாகவும் அநீதி சமுதாயத்தில் இருக்க கூடாது. சமத்துவத்திற்கு எதிரான அநீதி நீடிக்க கூடாது. கல்வி மூலம் மக்களை முன்னேற்ற வேண்டும். உலகை நல்வழிப்படுத்த வேண்டும். பாகுபாடற்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள், எண்டு சேட்டன் குமார் குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+