பெங்களூரில் ஆலங்கட்டி மழை... கோடை வெயிலுக்கு மத்தியில் குளிர்ந்த மக்கள்
பெங்களூர்: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்தை விட வெயில் அதிகளவில் வெளுத்து வாங்கும் நிலையில் பெங்களூர் நகரில் நேற்று இரவு பல இடங்களில் மழை பெய்தது. இன்று மதியம் மடிவாளா உள்பட நகரின் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கோடை வெப்பத்தில் தவித்த பெங்களூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
கோடைக்காலம் துவங்கியதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. சில மாநிலங்களில் வழக்கத்தை விட கோடை மழையின் அளவு குறையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனை பிரதிபலிக்கும் வகையில் தான் கோடை வெப்பம் கொளுத்தி எடுக்கிறது. இந்தியாவின் வடமேற்கு மற்றும் மத்திய மாநிலங்களில் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் மட்டும் வெயில் பதிவாகி உள்ளது. குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. வரும் நாட்களில் வெப்ப காற்று வீசலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும் சில மாநிலங்களில் அவ்வப்போது கோடை மழை பெய்து மண்ணையும், மக்களையும் குளிர்விக்கிறது. கர்நாடகம் மாநிலம் பெங்களூர் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. நேற்று இரவு திடீரென்று பெங்களூரின் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்தது. இன்று மதியமும் நகரின் பல இடங்களில் மழை பெய்தது. மடிவாளா, சாந்தி நகர் மற்றும் பெங்களூர் - ஓசூர் ரோடு உள்பட நகரில் பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று இரவு மட்டும் அதிகபட்சமாக ஞானபாரதி பியூ வளாகத்தில் 34 மில்லி மீட்டர் மழை பதிவானது. தொட்டபொம்சந்திராவில் 27.5 மில்லி மீட்டர், வித்யாரண்யபுராவில் 25.5 மிமீ, கெங்கேரியில் 25 மிமீ, வர்த்தூரில் 20 மிமீ, பீனியா தொழிற்பே்டடையில் 16 மிமீ, எச்ஏஎல் விமான நிலையத்தில் மிமீ, குமாரசாமி லேஅவுட்டில் 10 மிமீ, பாகலகுண்டேவில் 6 மிமீ, எச்எஸ்ஆர் லே-அவுட்டில் மிமீ என நகரில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications