ரவா இட்லி டோக்கன் வாங்கி..சாப்பிடாமல் போன நபர்! பெங்களூர் குண்டுவெடிப்பு! ஒருவரை கைது செய்த போலீஸ்
பெங்களூர்: பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது அம்மாநகர போலீஸ். வாடிக்கையாளர்போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெங்களூரு ஒயிட் ஃபீல்ட் ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நடந்தது குண்டுவெடிப்புதான் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தகவல் வெளியிட்டு உள்ளார். பெங்களூர் ராமேஸ்வரம் கஃபேயில், ஓட்டலுக்கு சாப்பிட வருவது போல வந்த வாடிக்கையாளர் ஒருவர்... தான் கையோடு கொண்டு வந்த பையை ஓட்டலில் வைத்து விட்டு சென்றதாகவும், அவர் விட்டு சென்ற பை ஒன்றில் இருந்த பொருள்தான் வெடித்ததாக முதல் கட்ட புகார்கள் தெரிவிக்கின்றான்.

சிசிடிவியில் குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளதாக துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்து உள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் சுமார் 28 முதல் 30 வயதுடையவர் என்று அவர் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் ஓட்டலில் ரவா இட்லிக்கான கூப்பனை எடுத்துக் கொண்டார், ஆனால் சாப்பிடாமல் சென்றுவிட்டார்.
ஐஇடி இருந்ததாகக் கூறப்படும் தனது பையை அவர் விட்டுச் சென்றார் என்று துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார். . வெடித்தது மிக வீரியமிக்க IED வெடிகுண்டு என போலீசார் கூறுகின்றனர். தீவிர விசாரணை நடந்து வருகின்றது என்று துணை முதல்வர் டிகே சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்.. இந்த குண்டு வெடிப்பில் 8 பேர் காயமடைந்துள்ளனர்
பையில் இருந்ததைத் தவிர, வளாகத்தில் ஐஇடி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று காவல்துறை முதலமைச்சரிடம் கூறியதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
குண்டுவெடிப்பு: இந்த நிலையில்தான் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் ஒருவரை கைது செய்தது அம்மாநகர போலீஸ். வாடிக்கையாளர்போல் வந்து வெடிகுண்டு வைத்தது யார் என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள பிரபல உணவகம் ராமேஸ்வரம் கஃபே. இந்த உணவகத்தின் ஒயிட் லீட் கிளையானது 80 அடி சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கஃபேயானது இன்று வழக்கம் போல் செயல்பட்டு வந்தது. அப்போது மதிய நேரத்தில் கஃபேயில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென வெடித்து சிதறியது. இதில் உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.
இது பெரிய அளவிலான குண்டுவெடிப்பு அல்ல, இது ஒரு தற்செயலான வெடிகுண்டு. இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் நடந்துள்ளன, இது நடக்கக்கூடாது. அது என்னவென்று பார்ப்போம். சமீப காலங்களில், இதுபோன்ற குண்டுவெடிப்புகள் குறைந்து இருந்தது. தற்போது மீண்டும் நடந்துள்ளது. . பாஜக ஆட்சியின் போது மங்களூரு பகுதியில் இப்படி நடந்தது. எங்கள் ஆட்சியின் போது இது போன்ற சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று சித்தராமையா கூறியுள்ளார்.
இதில் கைதானவர் யார் அவர் ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விவரம் வெளியாகவில்லை. குண்டுவெடிப்பில் காயமடைந்த 19 வயது ஓட்டல் ஊழியர் ஃபரூக், அமேசான் ஊழியர் தீபன்சு (23), ஸ்வர்ணாம்பா (49), மோகன் (41), நாகஸ்ரீ (35), மோமி (30), ஆகியோர் காயமடைந்தனர். பலராம் கிருஷ்ணன் (31), நவ்யா (25), ஸ்ரீனிவாஸ் (67) ஆகியோர் இந்த விபத்தில் காயம் அடைந்தனர்.
-
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே












Click it and Unblock the Notifications