பாஜக 'ஆபரேஷன் தாமரை'- கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களுக்கு தலா ரூ100 கோடி பேரம்!
பெங்களூர்: கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க 'ஆபரேஷன் தாமரை' (Operation Kamala)யை பாஜக செயல்படுத்த தொடங்கிவிட்டதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடா பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை வளைக்க ரூ50 கோடி முதல் ரூ100 கோடி வரை பாஜக பேரம் பேசுவதாகவும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார் ரவிக்குமார் கவுடா.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சித்தராமையா அரசு மீது பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் அடுத்தடுத்த ஊழல் முறைகேடு புகார்களை முன்வைத்து வருகின்றன.

முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி தரக்கூடியதாக மூடா நில முறைகேடு விஸ்வரூபம் எடுத்துள்ளது. சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையமான மூடா 14 வீட்டு மனைகளை ஒதுக்கிய விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி பெரும் நெருக்கடியில் சிக்கி இருக்கிறது.
சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி கொடுத்துள்ளார். இந்த அனுமதிக்கு எதிராக கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் சித்தராமையா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் விசாரணை வரும் 29-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில் பரபரப்பு தகவல்களை வெளியிட்டார். அதாவது, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க ஆபரேஷன் தாமரையை பாஜக கையில் எடுத்துள்ளது. கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை வளைக்க தலா ரூ50 கோடி முதல் ரூ100 கோடி வரை பாஜக தரப்பு பேரம் பேசி வருகிறது. ஆனால் பாஜகவின் இந்த பேரத்தை ஏற்க எந்த ஒரு எம்.எல்.ஏ.வும் முன்வரவில்லை.
என்னையும் தொலைபேசியில் அழைத்து பேரம் பேசினார்கள். ஆனால், ரூ100 கோடியை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என சொல்லிவிட்டேன். என்னிடம் பேரம் பேசியது பற்றி அமலாக்கத்துறையிடம் புகார் கொடுக்கலாம் என திட்டமிட்டுள்ளேன்.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்த்து, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை கணிசமாக வளைத்து பாஜக-ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சி அமைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பாஜகவின் இந்த திட்டம் நிச்சயமாக நிறைவேறாது.
பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ், மத்திய அமைச்சர்கள் ஷோபா கரந்தலாஜே, பிரகலாத் ஜோஷி, குமாரசாமி "கேங்"தான் கர்நாடகா காங்கிரஸ் அரசை கவிழ்க்க சதி செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் 136 எம்.எல்.ஏக்களும் பாறை போல முதல்வர் சித்தராமையாவுக்கு பின்னால் ஆதரவாக நிற்கிறோம் என்றார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications