போதும்டா சாமி.. ஆர்சிபி அணிக்கு முழுக்கு போடும் அதன் உரிமையாளர்.. மொத்தமாக விற்க முடிவு.. போச்சு
பெங்களூர்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்கு விரைவில் புதிய உரிமையாளர் வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கோப்பையை 18 வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில் அந்த அணி வென்றது. அதன்பின் 11 அப்பாவி பொதுமக்களின் மரணத்திற்கு காரணமாக மாறியது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்கு நடந்த பாராட்டு விழாவில் ஏற்பட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன. இப்படி ஒரு மோசமான சம்பவம் நடக்க உண்மையில் யார் காரணம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
முதல்வருக்கே தெரியவில்லை
முதல்வர் சித்தராமையா.. இந்த சம்பவம் குறித்து தனக்கே மிக தாமதமாக தெரிவிக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதாவது 11 பேர் மரணம் பற்றி தனக்கே உடனுக்குடன் தெரிவிக்கப்படவில்லை. அங்கே இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று என்னிடம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி உள்ளார். இதன் காரணமாக உளவு அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார்.
யாரோ தந்த அழுத்தம்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றி கொண்டாட்டத்தை அவசர அவசரமாக நடத்த வேண்டாம் என்றும், ஒரு வாரம் கழித்து நடத்தலாம் என்றும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், ஆர்சிபி நிர்வாகம் அதை கேட்கவில்லை. திட்டமிட்டபடி எப்படியாவது அந்த நிகழ்ச்சியை நடத்தியே தீர வேண்டும் என்று "அரசியல் அழுத்தம்" கொடுத்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசுக்கும், காவல்துறைக்கும் சில புள்ளிகள் வழியாக ஆர்சிபி அணி அழுத்தம் கொடுத்ததாம். பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு காவல்துறை அதிகாரி இதுகுறித்து கூறுகையில், "ஆர்சிபி அணியின் முக்கிய சில தலைகள்தான் இந்த குளறுபடிக்கு முக்கிய காரணம். உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா அவர்கள்கூட எங்களுடைய கருத்தை ஏற்றுக்கொண்டார். ஆனால், அவரின் கருத்தை கூட ஆர்சிபி ஏற்கவில்லை. போலீஸ் திட்டமிடுவதற்கு போதிய அவகாசம் இல்லை" என்றார்
ஆர்சிபி அணியை விற்க Diageo நிறுவனம் திட்டம்?
இப்படிப்பட்ட நிலையில்தான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிக்கு விரைவில் புதிய உரிமையாளர் வரலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் உரிமையாளரான Diageo Plc நிறுவனம், அந்த அணியில் தனது பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது. Diageo நிறுவனம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் என்ற இந்திய நிறுவனத்தின் மூலம் ஆர்சிபி அணியை நிர்வகித்து வருகிறது.
Diageo நிறுவனம் தனது பங்குகளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்பனை செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது. இது தொடர்பாக ஆலோசகர்களுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், முழு விற்பனை உட்பட பல்வேறு வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றாலும், அணியின் மதிப்பை 2 பில்லியன் டாலர் வரை நிர்ணயிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள் தற்போது ரகசியமாக நடைபெற்று வருகின்றன. இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் 3.3% வரை உயர்ந்தன. இது ஐந்து மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயர்வு ஆகும்.
ஆர்சிபி அணி சமீபத்தில் ஐபிஎல் கோப்பையை வென்றதன் மூலம் மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 2008-ல் ஐபிஎல் தொடங்கப்பட்டபோது இருந்த எட்டு அணிகளில் இதுவும் ஒன்று. ஆனால் இந்த ஆண்டுதான் முதல் முறையாக கோப்பையை வென்றது.
இந்த வெற்றியானது விராட் கோலியின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விராட் கோலி இந்த அணியின் முக்கிய வீரர் மட்டுமல்ல, உலக அளவில் அதிக ரசிகர்களைக் கொண்ட விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழ்கிறார்.
ஆனால், பெங்களூருவில் அணிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் உள்ளூர் அதிகாரிகளிடம் கடுமையான விமர்சனங்களை எழுப்பியது. மேலும், கூட்ட நெரிசல் மேலாண்மை மற்றும் நிகழ்வு பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியது. இந்தச் சம்பவம் Diageo நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
விளையாட்டு நிகழ்வுகளில் மது மற்றும் புகையிலை பொருட்களின் விளம்பரங்களை தடை செய்ய சுகாதார அமைச்சகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. நேரடி விளம்பரங்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தாலும், Diageo போன்ற நிறுவனங்கள் கிரிக்கெட் வீரர்களை வைத்து மறைமுக விளம்பரங்களை செய்து வருகின்றன. கடுமையான விதிகள் அமலுக்கு வந்தால், கிரிக்கெட் மூலம் நுகர்வோரை சென்றடையும் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் மது நிறுவனமான இந்த நிறுவனம் அணியை விற்க ஆலோசனை செய்வதாக கூறப்படுகிறது.
ஆர்சிபி அணியை முதலில் வாங்கியவர் விஜய் மல்லையா. அவர் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளராகவும், இந்தியாவின் மதுபான தொழிலில் முன்னணி நபராகவும் இருந்தார். மல்லையாவின் வணிக சாம்ராஜ்யம் சரிந்த பிறகு, Diageo நிறுவனம் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இதன் மூலம் ஆர்சிபி அணியின் கட்டுப்பாட்டை பெற்றது. இப்போது அணியின் உரிமையை மட்டும் விற்கும் திட்டத்தில் உள்ளது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications