Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’சிந்தி' கலாச்சாரம்.. 7ஆம் வகுப்பு பாடத்தில் சிரித்த தமன்னா..! டென்ஷன் ஆன பெற்றோர்.. பறந்த புகார்!?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வரும் தமன்னாவுக்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் அவருக்கு சம்பந்தமே இல்லை என்றாலும் தேவையில்லாமல் சர்ச்சைக்குள் சிக்கி இருக்கிறார் தமன்னா. கர்நாடகாவில் ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் அவர் குறித்த தகவல் இடம் பெற்று இருப்பதாக கூறி போராட்டத்தில் குறித்து இருக்கின்றனர் பெற்றோர்கள்.

தற்போது மிகப் பிரபலமான நடிகையாக இருந்தாலும் தமிழில் ஆரம்பத்தில் தமன்னா நடித்த படங்கள் அவ்வளவாக ஓடவில்லை. தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான அவர் அதற்குப் பிறகு ஆள் எங்கு இருக்கிறார் என்பதே தெரியாமல் போய்விட்டது.

Tamannaah Karnataka Syllabus

அதற்குப் பிறகு பாலாஜி சக்திவேலின் கல்லூரி படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தனது இன்னிங்ஸை ஆரம்பித்த அவர் அதற்கு பிறகு அயன் படத்தில் கவனம் பெற்றார்.

தொடர்ந்து சூர்யா, தனுஷ், விஜய் என பல முன்னணி நடிகர்களோடு கைகோர்த்து தற்போது வரை டாப் நடிகையாக உச்சத்தில் இருக்கிறார் . இடையில் சில படங்களில் சறுக்கல்களை சந்தித்த அவர் தொடர்ந்து பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் பான் இந்திய நடிகையாக வலம் வருகிறார். தொடர்ந்து ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற காவலா பாடல் அவரை ரசிகர்களிடம் வெகுவாக கொண்டு சேர்த்தது.

இதை அடுத்து தற்போது மீண்டும் சினிமாவில் மிக பிசியாக நடித்து வருகிறார். அட்டகாச நடனம், கலக்கல் நடனம் என இவரது நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் தான் திடீரென தனக்கு சம்பந்தமே இல்லாமல் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் தமன்னா. அப்படி என்ன பிரச்சினை? எதனால் இந்த விவகாரம் முளைத்திருக்கிறது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

பெங்களூருவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமன்னா குறித்த பாடத்திட்டம் இடம்பெற்றிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெங்களூரு அருகே உ:ள்ள ஹெப்பால் பகுதியில் சிந்தி உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 7ஆம் வகுப்பு பாடத் திட்டத்தில் சிந்தி மக்கள் குறித்த பாடம் இடம் பெற்றுள்ளது. சிந்தி மொழி பேசும் மக்கள் மற்றும் அவர்களின் கலாச்சாரத்தை விளக்கும் வகையிலான பாடம் உள்ளது. அதில் இந்தி நடிகர் ரன்வீர்சிங், நடிகை தமன்னா பற்றிய படங்களும் அவர்கள் குறித்து தகவல்களும் இடம்பெற்றிருந்தின.

இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்த போதிலும், இந்த தகவல் குறித்து அறிந்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது மாணவர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் இருப்பதாக பள்ளியில் வாட்ஸ் ஆப் குழுவில் பள்ளி நிர்வாகத்தினரிடம் புகார் அளித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகத்தினர் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை எனக் கூறி நேரிடையாகவே சென்று புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகம் அளித்த விளக்கத்தை ஏற்க அவர்கள் மறுத்துள்ளனர்.

சிந்தி இனத்தில் இருந்து அவர்கள் இந்தியா முழுவதும் பிரபலமாக இருப்பதால் அவர்கள் குறித்த தகவல்களை பாடத்தில் இணைத்ததாக கூறியுள்ளனர். ஆனால் இதனை ஏற்க மறுத்த பெற்றோர்கள் இதுகுறித்து கர்நாடக மாநிலத்தின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் அந்த பாடத் திட்டத்தினை நீக்க வேண்டுமெனவும், தமன்னா பற்றிய பாடத்தை நீக்காவிட்டால் அந்தப் பள்ளியில் இருந்து தங்களது குழந்தைகளை வேறுபள்ளிக்கு மாற்றி விடுவதாக எச்சரித்தனர். இதனால் இந்த விவகாரம் சமூக வலைதளங்கள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+