"420 மோசடி பேர்வழிகள்" 400 தொகுதியை வெல்வோம் என்கிறார்கள்! நோ சான்ஸ்! பிரகாஷ் ராஜ் கடும் அட்டாக்
பெங்களூர்: 420 (மோசடி) களை செய்தவர்கள் 400 தொகுதிகள் பற்றி பேசுகிறார்கள். ஜனநாயக நாட்டில் தனியாக ஒரு கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லை, என்று நடிகர் பிரகாஷ் ராஜ் மறைமுகமாக பாஜகவை விமர்சித்துள்ளார்.
தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக மீது எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனத்தை முன்வைத்து வருகின்றன. அந்த வகையில், பிரபல நடிகர் பிரகாஷ் ராஜும் பாஜகவை கடுமையாக சாடியிருக்கிறார். பாஜகவை நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக தனது விமர்சனத்தை முன்வைத்து இருக்கும் பிரகாஷ் ராஜ் கூறியிருப்பதாவது:-

பிரகாஷ் ராஜ் விமர்சனம்: 420 (மோசடி) களை செய்தவர்கள் 400 தொகுதிகள் பற்றி பேசுகிறார்கள். ஜனநாயக நாட்டில் தனியாக ஒரு கட்சி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. மக்கள் கொடுத்தால் மட்டுமே உங்களால் வெற்றி பெற முடியும். நாங்கள் இத்தனை சீட்களை கைப்பற்றுவோம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் கூற முடியாது. இப்படி சொல்வது ஆணவத்தனமானது" என்றார்.
பிரகாஷ் ராஜ் எந்த ஒரு அரசியல் கட்சியையும் பெயர் குறிப்பிட்டு விமர்சிக்க வில்லை பாஜகவையே இவ்வாறு மறைமுகமாக தாக்கினார். பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி ராஜ்யசபாவில் குடியரசுதலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்து பேசினார். அப்போது மோடி கூறுகையில், " வரும் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்.
லோக்சபா தேர்தல்: ஒட்டு மொத்த தேசமும் இதை கூற தொடங்கிவிட்டது. காங்கிரஸ் தலைவர் கார்கே கூட இதைக் கூறியுள்ளார்" என்றார். பிரதமர் மோடி இவ்வாறு பேசிய நிலையில், அவரது பேச்சை விமர்சிக்கும் விதமாகவே பிரகாஷ் ராஜ் மேற்கூறியவாறு கடுமையாக விமர்சித்து இருக்கிறார். லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 19- ஆம் தேதி முதல் ஜூன் 01 ஆம் தேதி வரை 7 கட்டங்களக தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 04 ஆம் தேதி எண்ணப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருப்பதால், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. மத்தியில் கடந்த 2014 முதல் ஆட்சியில் இருக்கும் பாஜக, வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது.
மோடி பிரசாரம்: பிரதமர் மோடி நாடு முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. பாஜக மட்டும் 370 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற வியூகத்துடன் பாஜக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மறுபக்கம், பாஜகவை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற திட்டத்துடன் இந்தியா கூட்டணி என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்த நிதிஷ்குமார், கூட்டணியில் இருந்து வெளியே பாஜக கூட்டணியில் ஐக்கியமானார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications