விழுந்தது தடை.. இனி பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் கிடையாது.. கர்நாடகாவில் புதிய உத்தரவு
பெங்களூர்: கர்நாடகத்தில் அரசு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில் பயன்படுத்த தடை விதித்து முதல்வர் சித்தராமையா அதிரடி உத்தரவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அரசு நிறுவனமான நந்தினியின் தயாரிப்புகளை வாங்கி கட்டாயம் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என்று மத்திய மற்றும் ஒவ்வொரு மாநில அரசுகள் கூறி வருகின்றன. ஏனென்றால் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

கர்நாடகாவிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி பலர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கர்நாடகா அரசியல் கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகளில் குடிநீருக்காக பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் சித்தராமையா அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அரசு அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்கள், அதிகாரப்பூர்வ அரசு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்த தடை விதித்துள்ளார். அதேபோல் அரசு அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்கள், அரசு நிகழ்வுகளில் கர்நாடக பால் கூட்டமைப்பின் தயாரிப்பான நந்தினி பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் சித்தராமையா தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,‛'அரசு அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்வுகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்குப் பதிலாக சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களால் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
இதுதொடர்பாக முன்பே அறிவுரை வழங்கப்பட்டது. ஆனால் யாரும் பின்பற்றவில்லை. இனிமேல் அரசு அலுவலகங்களில் நடக்கும் கூட்டங்கள், அரசு நிகழ்வுகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும். இதனை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அதேபோல் முதல்வர், மந்திரிகள் மற்றும் அனைத்து அரசு கூட்டங்கள், அரசு நிகழ்ச்சிகளில் கர்நாடக பால் கூட்டமைப்புக்கு சொந்தமான நந்தினி தயாரிப்புகளை மட்டுமே கட்டாயம் பயன்படுத்த வேண்டும்' என கூறியுள்ளார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications