Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தல் வருது.. வாரந்தோறும் பிரதமர் மோடி கர்நாடகா பயணம்.. நாளை பெங்களூர் சர்வதேச விமான கண்காட்சி!

பெங்களூர் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபை நெருங்கிவரும் நிலையில் பிரதமர் மோடி தொடர்ந்து அம்மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். பெங்களூர் சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

பிரதமர் மோடி நாளை காலை 9:30 மணியளவில், பெங்களூரில் உள்ள யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் 14வது ஏரோ இந்தியா 2023 நிகழ்வை தொடங்கி வைக்கிறார். ஏரோ இந்தியா 2023-ன் கருப்பொருள் "ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை" ஆகும்.

PM Modi to inaugurate the 14th edition of Aero India 2023 in Bengaluru

'மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்' என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள்/தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.

இந்திய பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பர்தா-தற்சார்பு இந்தியா குறித்த பிரதமரின் முக்கியத்துவமும் இதில் முன்னிறுத்தப்படும். இந்நிகழ்ச்சியில் நாட்டின் வடிவமைப்புத் தலைமைத்துவம், யுஏவித் (ஆளில்லாத விமானம்) துறையில் வளர்ச்சி, பாதுகாப்பு விண்வெளி மற்றும் எதிர்காலத் தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் நாட்டின் முன்னேற்றத்தை வெளிக்கொணரும் விதமாக அமையும். மேலும், இந்நிகழ்வு, இலகுரக போர் விமானம் (எல்சிஏ)-தேஜாஸ், எச்டிடி-40, டோர்னியர் லைட் யூட்டிலிட்டி ஹெலிகாப்டர் (எல்யுஎச்), லைட் காம்பாட் ஹெலிகாப்டர் (எல்சிஎச்) மற்றும் அட்வான்ஸ்டு லைட் ஹெலிகாப்டர் (ஏஎல்எச்) போன்ற உள்நாட்டு விமான தயாரிப்புகளின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் விதமாக காட்சிப்படுத்தப்படும். உலகளாவிய விநியோகச் சங்கிலியில் உள்நாட்டு குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஒருங்கிணைக்கவும், மேம்பாட்டுடன் கூடிய உற்பத்திக்காக இணைந்து செயல்படுவது தொடர்பான நடவடிக்கைகள் உட்பட வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்த நிகழ்வு உதவும்.

ஏரோ இந்தியா 2023-ல் 80க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும். ஏரோ இந்தியா 2023-ல் சுமார் 30 நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் உலகளாவிய மற்றும் இந்திய அசல் இயந்திர உற்பத்தித் துறையின் 65 தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்க வாய்ப்புள்ளது.
ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில் சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட 800 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் பங்கேற்கும்.

கண்காட்சியில் பங்கேற்கும் இந்திய நிறுவனங்களில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப்கள் நிறுவனங்களும் அடங்கும். இது நாட்டின் முக்கிய தொழில்நுட்பங்களின் முன்னேற்றம், விண்வெளி மற்றும் பாதுகாப்பு திறன்களின் வளர்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக அமையும். ஏரோ இந்தியா 2023-ல் ஏர்பஸ், போயிங், டசால்ட் ஏவியேஷன், லாக்ஹீட் மார்ட்டின், இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி, பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ், ஆர்மி ஏவியேஷன், எச்.சி ரோபோடிக்ஸ், எஸ்.ஏ.ஏ.பி., சஃப்ரான், ரோல்ஸ் ராய்ஸ், லார்சன் & டூப்ரோ, லியர்ஸ் அண்ட் டூப்ரோ, லைமிட் லைப்ரோ, லைமிட், பாரத் எச்.எல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் , பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மற்றும் பி‌இ‌எம்‌எல் லிமிடெட் போன்ற நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.

ஏரோ இந்தியா 2023 கண்காட்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வு, பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை மையத்தில் பிப்ரவரி 13-17 வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு தொழில்துறையினருக்கு தங்களின் சமீபத்திய உபகரணங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களை காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது. பாதுகாப்புத்துறை அலுவலர்கள், அசல் உபகரண உற்பத்தியாளர்களுடன் தொடர்புகொள்வதற்கும், ஆயுதப் படைகளில் எதிர்காலத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலான தயாரிப்புகளில் முதல் அனுபவத்தைப் பெறுவதற்கும் இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 'ஆத்மநிர்பர்தா'- தற்சார்பு இந்தியா என்ற நிலையை அடைவதற்கான நம் நாட்டின் இலக்கைத் தொடர்ந்து, இந்தியக் கடற்படை சமீபத்தில் உள்நாட்டுத் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போர்விமானமான (இரட்டை என்ஜின் டெக் அடிப்படையிலான போர்விமானம்) இலகு ரகபோர் விமானம் (கடற்படை) உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐ‌என்‌எஸ் விக்ராந்தில் தரையிறக்கப்பட்டது.

இந்த விமானத்தை இந்திய கடற்படை சோதனை விமானி இயக்கினார். இந்தியக் கடற்படையின் ஆத்மநிர்பர் பாரத்-தற்சார்பு இந்தியா என்ற தொலைநோக்கு பார்வையின் விளைவுதான் இந்த முக்கிய நடவடிக்கையாகும். ஏரோ இந்தியா 2023 கண்காட்சியில், இந்திய கடற்படை முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் பங்கேற்கிறது.

பல ஆண்டுகளாக பங்கேற்பிலும், செயல்பாட்டு அளவிலும் வளர்ச்சியடைந்துள்ள ஏரோ இந்தியா, கடற்படை விமானப் போக்குவரத்து மற்றும் நாட்டின் பாதுகாப்புப் படைகளின் தன்னம்பிக்கையின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக மற்றொரு முக்கிய நிலையை நிரூபிக்கும் விதமாக அமையும்.

முன்னதாக கடந்த வாரம் கர்நாடகாவ்ன் தும்கூரில் ஹெச்ஏஎல் எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் தொழிற்சலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தும்கூர் தொழிற்பேட்டை, திப்தூர் மற்றும் சிக்கநாயகனஹள்ளியில் 2 ஜல்ஜீவன் இயக்கத்திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+