2 வயது குழந்தைனு கூட பாக்கல.. “அந்த” ஆசைக்கு பிஞ்சு பலியான சோகம்.. பெரியப்பா செய்த கொடூர காரியம்
பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூர் அருகே 2 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்த பெரியப்பாவை கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு புறநகர் பகுதியான அத்திபெல்லே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெரலூர் பகுதியை சேர்ந்தவர் தீபு. இவர் அப்பகுதியில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்
இவரது சகோதரர் ஒருவர் தொட்டபள்ளாப்புராவில்வசித்து வரும் நிலையில் அவருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும், 5 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

அதிர்ச்சி சம்பவம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது சகோதரர் தீபுவை சந்திக்க பெங்களூர் வந்த நிலையில் மார்ச் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோழி வாங்குவதற்காக இரண்டு வயது சிறுமியை காரில் அழைத்துக்கொண்டு வெளியே சென்றுள்ளார். அப்போது காரில் வைத்து சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி அழ ஆரம்பித்த நிலையில் குழந்தையை ஓங்கி அறைந்ததால் மயங்கி விழுந்த குழந்தை இறந்ததாக கூறப்படுகிறது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
இதையடுத்து காரில் சென்ற போது பிரேக் பிடித்ததால் குழந்தை டேஷ்போர்டில் மோதி மயங்கி விட்டதாக கூறி குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளான் அந்த முப்பத்தி ஒரு வயது கொடூரன். மருத்துவமனையில் பரிசோதித்த போது ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் இது குறித்து சந்தேகம் அடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர் முதலில் தற்செயலாக மரணம் ஏற்பட்டதாக கூறியுள்ளார் தீபு.

அதிரடி கைது
இருந்தும் மாற்றி மாற்றி பேசுவதால் சந்தேகம் அடைந்த போலீசார் குழந்தையின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். அந்த ஆய்வில் குழந்தையின் மரணம் பாலியல் வன்கொடுமையால் தான் ஏற்பட்டது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து விசாரிக்க வேண்டிய முறையில் விசாரித்ததையடுத்து தான் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டான். இதையடுத்து உடனடியாக திபுவை காவல்துறையினர் கைது செய்ததோடு கொலை போக்சோ சட்டம் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தொழிலாளிக்கு மரண தண்டனை
இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே பச்சிளம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களுக்கு முன் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இரண்டு வயதான பக்கத்து வீட்டு சிறுமியை 17 வயது சிறுவன் பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் புனேவில் ஒரு கிராமத்தில் இரண்டு வயது சிறுமியை முப்பத்தி எட்டு வயது தொழிலாளி பாலியல் வன்கொடுமை செய்ததும் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications