‛‛விசாரணைக்கு அழைத்தால் தற்கொலை’’.. இடியை இறக்கிய பெண்கள்! பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கில் ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடகாவில் பாஜக கூட்டயின் ஜேடிஎஸ் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வெளியான நிலையில் விசாரணைக்கு குழுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது விசாரணைக்கு அழைத்தால் தற்கொலை செய்து கொள்வோம் என பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுவதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஜேடிஎஸ் எனும் கட்சியை நடத்தி வருகிறார். இவரது மூத்த மகன் ரேவண்ணா கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகனும், தேவகவுடாவின் பேரனுமான பிரஜ்வல் ஜேடிஎஸ் சார்பில் ஹாசன் எம்பியாக உள்ளார்.

தற்போதைய லோக்சபா தேர்தலிலும் ஹாசனில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளாராக பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார். கடந்த மாதம் 26ம் தேதி இந்த தொகுதிக்கு தேர்தல் நடந்த நிலையில் அன்றைய தினமே அவர் ஜெர்மனி கிளம்பினார்.
இதற்கு முக்கிய காரணம் அவரது ஆபாச வீடியோக்கள் பரவியது தான். அதாவது பிரஜ்வல் ரேவண்ணா உதவி கேட்டு வரும் பெண்களை மிரட்டி ‛செக்ஸ் டார்ச்சர்' கொடுத்து அதனை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும், அந்த வீடியோக்கள் தேர்தலுக்கு முன்பு பரவியது தெரியவந்தது. இதுதொடர்பாக பெண் ஒருவர் மாநில மகளிர் ஆணையத்தில் அளித்த புகாரில் எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே முன்னாள் பணிப்பெண் அளித்த பாலியல் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணாவுக்கு எஸ்ஐடி விசாரணைக்கு அழைத்து அவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா சார்பில் 7 நாட்கள் அவகாசம் கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்த எஸ்ஐடி தயாராகி வருகிறது. அதன்படி எஸ்ஐடியில் இடம்பெற்றுள்ள பெண் அதிகாரிகள் ஆபாச வீடியோவில் உள்ள பெண்களின் விபரங்களை சேகரித்து அவர்களை தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். இப்படியாக வழக்கு தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கையில் எஸ்ஐடியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் அளிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. அதோடு விசாரணைக்கு அழைத்தால் தற்கொலை செய்து கொள்வோம் என அவர்கள் மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முதற்கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட 10 பெண்களை அடையாளம் கண்டு எஸ்ஐடியினர் விசாரணை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் வாக்குமூலம் எதுவும் அளிக்க முன்வரவில்லை.
மாறாக புகார் அளித்தவர்களிடம் விசாரியுங்கள். நாங்கள் யாரும் பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் எதுவும் அளிக்கவில்லை. பிறகு எதற்காக எங்களை அழைத்து விசாரிக்கிறீர்கள்? எங்களை கட்டாயப்படுத்தி விசாரித்தால் தற்கொலை செய்து கொள்வோம். என பெண்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தும் எஸ்ஐடிக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோரின் வீட்டில் பணி செய்த முன்னாள் பணிப்பெண் ஹோலேநரசிப்புரா போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த பெண்ணிடம் மட்டுமே இப்போதைக்கு எஸ்ஐடியினர் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மற்றவர்கள் வாக்குமூலம் அளிக்க மறுப்பதால் இந்த வழக்கில் பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications