Prajwal Revanna: கதறி அழுத தேவகவுடா பேரன்.. பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு!
பெங்களூர்: முன்னாள் பிரதமர் தேவ கவுடாவின் பேரனும், கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமியின் அண்ணன் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், பிரஜ்வல் குற்றவாளி என இன்று தீர்ப்பளித்திருக்கிறது.
பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரஜ்வல் மீது புகார் இருக்கிறது. இதன் அடிப்படையில் 4 வழக்குகள் அவர் மீது பதியப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இவர் எம்பியாக இருந்த ஹசன் தொகுதியில் இவருக்கு சொந்தமாக பண்ணை வீடு இருக்கிறது. பண்ணை வீட்டில் வைத்து 48 வயது மதிக்கத்தக்க பணிப்பெண்ணை இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்த புகார் மீது போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சிஐடி சைபர் கிரைம் பிரிவு காவல் நிலையத்தில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாகப் பதிவு செய்ததாக ரேவண்ணா மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008 ஆகியவற்றின் கீழ் பல பிரிவுகளின் கீழ் பிரஜ்வல் மீது வழக்கு தொடரப்பட்டது.
கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி விசாரணை தொடங்கியது. விசாரணை தொடங்கி 14 மாதங்களில், இந்த வழக்கில் 113 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு 1,632 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜூலை 18ம் தேதி விசாரணை முடிந்தது. ஜூலை 30ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சில காரணங்களுக்காக தீர்ப்பு ஆக.1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.
தீர்ப்பில் பிரஜ்வல் குற்றவாளி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தீர்ப்பின் போது பிரஜ்வல் ரேவண்ணா நீதிமன்றத்தில் கண்ணீர் விட்டு அழுததாகக் கூறப்படுகிறது. நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறும் போதும் அவர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி காணப்பட்டார். தண்டனையின் அளவு குறித்த தீர்ப்பை நீதிமன்றம் இன்று பிற்பகல் அறிவிக்க உள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பிரிவுகளில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 376(2)(k) மற்றும் 376(2)(n) ஆகியவற்றிற்கு குறைந்தபட்சம் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். இது ஆயுள் தண்டனை வரை நீட்டிக்கப்படலாம். மற்ற பிரிவுகளான 354(A), 354(B), 354(C) ஆகியவை மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகுக்கும்.
பிரிவு 506-க்கு ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும், பிரிவு 201-க்கு ஒரு வருடம் முதல் ஏழு ஆண்டுகள் வரையிலும் தண்டனை விதிக்கப்படலாம். தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2008-ன் பிரிவு 66(E) மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படலாம்.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications