"பிளாக் மெயில்.." முதலில் பிரஜ்வல், இப்போ சகோதரர் மீதும் பாலியல் புகார்! சிக்கலில் ரேவண்ணா குடும்பம்
பெங்களூர்: பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டியதாகக் கர்நாடகாவைச் சேர்ந்த பிரஜ்வல் ரேவண்ணா மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன. இதற்கிடையே அவரது சகோதரரும் ஜேடிஎஸ் தலைவருமான சூரஜ் ரேவண்ணா தொடர்பாகவும் சில பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களில் ரேவண்ணா குடும்பத்தின் மீது எழுந்த புகார்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த சில காலமாகவே வெளியாகும் தகவல்கள் பகீர் கிளப்புவதாகவே இருக்கிறது. அங்கு பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார்கள் அதிர வைத்தது.

பிரஜ்வல் ரேவண்ணா: இதற்கிடையே பிரஜ்வல் ரேவண்ணா சகோதரரும் ஜேடிஎஸ் தலைவருமான சூரஜ் ரேவண்ணா சில பரபர புகார்களை முன்வைத்து இருக்கிறார். தன் மீது பொய்யான பாலியல் வன்கொடுமை புகார் அளிக்கப் போவதாகச் சிலர் மிரட்டுவதாகவும் அப்படி புகார் அளிக்கக் கூடாது என்றால் 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் சூரஜ் ரேவண்ணா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக சூரஜ் ரேவண்ணாவின் நண்பர் ஷிவ்குமார் என்பவர் இரண்டு பேர் மீது புகார் அளித்துள்ளார். இரண்டு பேர் தன்னை அணுகி ₹ 5 கோடி கேட்டதாகவும் ஒரு வேளை பணத்தைத் தர மறுத்தால் சூரஜ் ரேவண்ணா மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்வதாக மிரட்டியதாக சூரஜ் ரேவண்ணா கூறியுள்ளார்.
பிளாக் மெயில்: அந்த புகாரில் சிவக்குமார் மேலும் கூறுகையில், "தனக்கு வேலை தேடித் தருமாறு அந்த நபர் முதலில் என்னை அணுகினார். நான் சூரஜ் ரேவண்ணா நம்பரை கொடுத்து நேரடியாக அவரை தொடர்பு கொள்ளச் சொன்னேன். ஆனால் அவருக்கு வேலை செட் ஆகவில்லை.. ஆனால், திடீரென அவர் எங்களை பிளாக் மெயில் செய்ய ஆரம்பித்துவிட்டார்" என்று அவர் அந்த புகாரில் கூறியிருக்கிறார்.
இருப்பினும், பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த நபர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சிவக்குமார் புகார் அளித்தது குறித்த தகவல் வெளியான உடனேயே உள்ளூர் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்த அந்த நபர், சூரஜ் பண்ணை வீட்டில் வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறியிருக்கிறார். இந்தச் சம்பவம் கர்நாடகாவில் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பிரஜ்வல் ரேவண்ணா: ஏற்கனவே இந்த சூரஜ் ரேவண்ணாவின் சகோதரரும் முன்னாள் எம்பியுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது பாலியல் பலாத்கார வழக்கு இருக்கிறது. இந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள அவர் இப்போது நீதிமன்ற காவலில் இருக்கிறார். பிரஜ்வல் ரேவண்ணா நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஹாசன் தொகுதியில் போட்டியிட்ட போதிலும் அவரால் வெல்ல முடியவில்லை.
"3000 ஆபாச வீடியோ பிரஜ்வல் ரேவண்ணா" சகோதரர் சூரஜ் மீது ஓரின சேர்க்கை புகார்- பணம் பறிக்க நாடகமா?
கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி ஹாசன் தொகுதியில் லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியது. இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஜேடிஎஸ் உத்தரவிட்டது. இது பூதாகரமான நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றனர்.
கைது: சில வாரங்கள் அவர் தலைமறைவாக இருந்த நிலையில், அவருக்கு பிடிவாரண்ட், ப்ளு கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அவருக்கு அழுத்தம் அதிகரித்த நிலையில், அதன் பின்னரே இந்தியா திரும்பினார். நாடு திரும்பிய உடனேயே பெங்களூர் ஏர்போர்ட்டில் வைத்து அவரை போலீசார் கைது செய்தனர். இப்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார்.
அதேபோல பிரஜ்வல் தந்தை ரேவண்ணாவும் பெண்ணை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார். அதாவது பிரஜ்வலால் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் பெண்ணை போலீசில் புகார் அளிக்க விடாமல் அவரை கடத்தி மிரட்டியதாகப் புகார் எழுந்தது. இதில் ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications