மதவெறியர்களுக்கு இது வழக்கமாகிவிட்டது.. மக்களே பாஜகவை கேள்வி கேளுங்க! சீறிய பிரகாஷ் ராஜ்! என்னாச்சு?
லஞ்ச வழக்கில் சிக்கிய கர்நாடகா பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா முன்ஜாமீன் கிடைத்த நிலையில் அவரது ஆதராளர்கள் மலர்தூவி பட்டாசு வெடித்த வரவேற்றனர்.
பெங்களூர்: ‛‛பலாத்காரம் செய்தவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்களை வரவேற்பது இந்த மதவெறியர்களுக்கு வழக்கமாகிவிட்டது. மக்களே உங்களால் தான் பாஜகவுக்கு பாடம் புகட்ட முடியும்'' என நடிகர் பிரகாஷ் ராஜ் ட்விட்டரில் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார். மேலும் பாஜகவினரை எதிர்த்து கேள்வி கேட்பது எப்போது? என வீடியோ ஒன்றை பகிர்ந்து வினா எழுப்பி உள்ளார்.
கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனம்(கேஎஸ்டிஎல்) உள்ளது. இதன் தலைவராக தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா இருந்தார். இந்நிலையில் தான் மூலப்பொருள் தொடர்பான டெண்டர் வழங்க மதல் விருபாக்சப்பா சார்பில் ஒப்பந்ததாரரிடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த நபர் மதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் மதலிடம் ரூ.40 லட்சம் லஞ்சமாக கொடுத்தார். பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தின் தலைமை கணக்காளராக பணியாற்றி வந்த பிரசாந்த் மதலை லோக்ஆயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

பாஜக எம்எல்ஏ மகன் கைது
இதனைத் தொடர்ந்து அவரின் அலுவலகம் மற்றும் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன. இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடியும், வீட்டில் இருந்து ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.7.70 கோடி பறிமுதலானது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும் இதில் மதல் விருபாக்சப்பா தான் முக்கிய குற்றவாளி என்ற குற்றசாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தனர். முதல் குற்றவாளியாக மதல் விருபாக்சாப்பா சேர்க்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மதல் விருபாக்சப்பா கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெடன் நிறுவனத்தின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

பாஜக எம்எல்ஏ மீது வழக்கு
மேலும் இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பாவிடமும் லோக்ஆயுக்தா விசாரிக்க சம்மன் வழங்கப்பட்டது. மேலும் அவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தகவல் வெளியானது. இதையடுத்து அவர் தலைமறைவானார். மேலும் அவரது சார்பில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் மதல் விருபக்சப்பாவுக்கு முன்ஜாமீன் வழங்கியது.

பாஜகவினர் வரவேற்பு
இந்த நிலையில் மதல் விருபாக்சப்பா காரில் சொந்த ஊர் திரும்பினார். இந்த வேளையில் அவருக்கு ஆதரவாளர்கள் உற்சாகமாக வரவேற்பு தெரிவித்தனர். மேளதாளங்கள் முழங்க, பட்டாசு வெடித்து அவரை தொண்டர்கள் வரவேற்றனர். மேலும் விசிலடித்தும் அவரது கார் மீது பூக்களை தூவியும் வரவேற்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இந்த சம்பவத்தை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சிகள் பாஜகவினரை கடுமையாக சாடி வருகின்றனர்.
|
பிரகாஷ் ராஜ் விமர்சனம்
அந்த வரிசையில் தற்போது நடிகர் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளார். அதாவது பிரகாஷ் ராஜூவும் பாஜகவினரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛இந்த கொள்ளையர்களுக்கு மக்களால் மட்டுமே பாடம் புகட்ட முடியும். பலாத்காரம் செய்பவர்கள், கொலை செய்தவர்கள், கொள்ளையடித்தவர்களை வரவேற்பது இந்த மதவெறியர்களுக்கு வழக்கமாகிவிட்டது. அன்பான மக்களே இன்னும் எத்தனை காலம் தான் நாம் இதை பொறுத்துகொள்வோம். இதனை எதிர்த்து எப்போது குரல் எழுப்பி கண்டிப்போம்'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications