நீர்மூழ்கி கப்பலில் பயணம்.. வரலாறு படைத்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
டெல்லி: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, நீர்மூழ்கி கப்பலில் பயணித்து வரலாற்று சாதனை படைத்திருக்கிறார். இதற்கு முன்னர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நீர்மூழ்கி கப்பலில் பயணித்திருந்தார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் வாக்ஷீர் நீர்மூழ்கி கப்பலில் திரௌபதி முர்மு பயணித்திருக்கிறார். கர்நாடகாவின் கார்வார் கடற்படை தளத்திலிருந்து முர்மு பயணித்திருக்கிறார். இந்த பயணம் மூலம், நீர்மூழ்கி கப்பலில் பயணித்த இரண்டாவது குடியரசுத் தலைவர் என்கிற பெருமையை முர்மு பெற்றிருக்கிறார்.

முர்முவின் பயணத்தில், குடியரசுத் தலைவர் முர்முவுடன் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் கே. திரிபாதியும் பயணித்திருக்கிறார். கார்வார் கடற்படைத் தளத்தில், கடற்படை சீருடையில் வந்த திரௌபதி முர்மு, நீர்மூழ்கிக் கப்பலுக்குள் நுழையும் முன் அங்கிருந்த கடற்படை வீரர்களைப் பார்த்து கையசைத்தார். குடியரசுத் தலைவர் செயலகம் தனது 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவுகளிலும் இது தொடர்பான புகைப்படம் பதிவேற்றப்பட்டிருக்கிறது.
ஐஎன்எஸ் வாகீர், உள்நாட்டுத் தயாரிப்பான கல்வாரி வகுப்பு நீர்மூழ்கிக் கப்பலாகும். ப்ராஜெக்ட்-75 ஸ்கார்பீன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஆறாவது மற்றும் இறுதி கப்பலான இது, கடந்த ஜனவரியில் (2025) கடற்படையில் இணைக்கப்பட்டது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் மேம்பட்ட சோனார் உபகரணங்களுடன் இந்த கப்பல், இந்தியாவின் கடற்படை பலத்தை அதிகரித்திருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications