கர்நாடகாவில் காரில் நின்றபடி ரோட் ஷோ..பிரதமர் மோடி செய்த காரியம்.. நெகிழ்ந்த தொண்டர்கள்..என்னாச்சு!
பெங்களூர்: பெங்களூர்- மைசுரு இடையே அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை நாட்டிற்கு அர்ப்பணிக்கவும் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி இன்று கர்நாடகம் வருகை தந்தார். பிரதமர் மோடி வருகை காரணமாக மைசூரு மற்றும் மண்டியா மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. அப்போது பிரதமர் மோடி மீது மக்கள் பூக்களை தூவி வரவேற்றனர். பதிலுக்கு மோடியும் பூக்களை தூவியது அங்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாத துவக்கத்தில் தேர்தல் நடைபெறும் என தெரிகிறது.
தேர்தல் தேதியை இந்த மாத இறுதியில் தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு சில வாரங்களே எஞ்சியுள்ளதால் அரசியல் தலைவர்களின் பார்வை கர்நாடக மாநிலம் பக்கம் அதிகமாக திரும்பியுள்ளது.

கடந்த 2 மாதங்களில்..
கர்நாடகவில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனால், ஆட்சியை தக்க வைக்க பாஜக தீவிர முயற்சி செய்து வருகிறது. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜகவின் பிற முத்த தலைவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு அடிக்கடி வந்து சென்று ஆதரவு திரட்டி வருகிறார்கள். பிரதமர் மோடி கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 முறை கர்நாடகாவிற்கு வருகை தந்து இருக்கிறார்.

கர்நாடகா வந்த பிரதமர் மோடி
இந்த நிலையில், இன்று பிரதமர் மோடி கர்நாடக மாநிலத்திற்கு வருகை தந்தார். பெங்களூரு- மைசுரு இடையே அமைக்கப்பட்டுள்ள 10 வழிச்சாலையை நாட்டிற்கு அர்ப்பணிக்கவும் 16 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி இன்று வருகை தந்தார். கடந்த 2 மாதத்தில் பிரதமர் மோடியின் 6-வது கர்நாடக சுற்றுப்பயணம் இதுவாகும். டெல்லியில் இருந்து தனி விமானத்தில் காலை 11.35 மணியளவில் மைசூரு விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மண்டியா மாவட்டத்தில் உள்ள பிஇஎஸ் கல்லூரி மைதானத்திற்கு வந்தார்.

காரின் டோரை திறந்து நின்றபடி
பின்னர் அங்குள்ள ஐ.பி.சர்க்கிளில் இருந்து, 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிரதமர் மோடி காரில் ஊர்வலமாக (ரோட் ஷோ) வந்தார். 2 கிலோ மீட்டர் பிரதமர் மோடி செல்லும் போது சாலையின் இருபுறங்களிலும் நுற்றுக்கணக்கான மக்கள், பிரதமர் மோடியை வரவேற்க திரண்டு இருந்தனர். பிரதமர் மோடியை பார்த்ததும் சாலையோரம் நின்ற தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். அவர்களை பார்த்து பிரதமர் மோடியும் காரின் டோரை திறந்து நின்றபடி கைகளை காட்டினார்.

மோடி மோடி என கோஷம்
பிரதமர் மோடியை நோக்கி தொண்டர்களை பூக்களை வீசினர். இதனால் பிரதமரின் வாகனம் முழுவதும் பூக்களாக காட்சி அளித்தது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தன்னைக் காண மக்கள் நின்றதை பார்த்து நெகிழ்ந்த பிரதமர் மோடி, காரில் கிடந்த பூக்களை அள்ளி மக்களை நோக்கி வீசினார். இதைப் பார்த்து கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகத்தில் மோடி மோடி என கோஷம் போட்டனர். பிரதமர் மோடி வருகை காரணமாக மைசூரு மற்றும் மண்டியா மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது.

கூடுதல் கவனம் செலுத்தும் பாஜக
பழைய மைசூர் பிராந்தியத்தில் மைசூர், சம்ராஜ்நகர், ராம்நகர், பெங்களூர் ரூரல், கோளார் , மண்டியா உள்பட 9 மாவட்டங்கள் உள்ளன. மொத்தம் 61 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட இந்த பகுதி ஜேடிஎஸ் கட்சியின் கோட்டையாக உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் இந்த பகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு கர்நாடகாவின் கடலோர மாவட்டங்கள், மும்பை -கர்நாடக பிராந்தியங்களில் பாஜக அதிக இடங்களில் வென்றிருந்தது. ஆனாலும் ஓல்டு மைசூர் பிராந்தியம் மற்றும் ஐதராபாத்- கர்நாடக பிராந்தியங்களில் சற்று பின்னடைவை சந்தித்தது. இதனால், இந்த பகுதிகளில் பாஜக தற்போது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார்












Click it and Unblock the Notifications