துருக்கி மக்களுக்கு துணையாக 140 கோடி பேர் இருக்கின்றனர்.. உதவ இந்தியா தயார்! பிரதமர் மோடி அறிவிப்பு
துருக்கியில் ரிக்டர் அளவில் 7.8 என உருவான நிலநடுக்கம், சிரியா, லெபனான், சைப்ரஸ் மற்றும் எகிப்து வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு: துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 600க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில், ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இந்நிலையில் துருக்கிக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

'எரிசக்தி வாரம்' மத்திய அரசால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் பேசியதாவது, "துருக்கியில் ஏற்பட்ட அபாயகரமான நிகழ்வை நாம் அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இதில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதைவிட அதிகமாக பொருட் சேதங்கள் ஏற்பட்டிருக்கிறது.
துருக்கிக்கு அருகில் உள்ள நாடுகள் கூட இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலநடுக்கத்தில் உயிர்களையும், உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இம்மக்களுக்கு 140 கோடி இந்தியர்களும் உறுதுணையாக உள்ளோம்" என்று கூறியுள்ளார். மேலும், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications