பஜ்ரங் தள நிர்வாகி நள்ளிரவில் வெட்டி கொலை.. உடனடியாக திரண்ட இந்துத்துவ அமைப்பினர்.. என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவின் ஷிவமொகா நகரில் 26 வயதான பஜ்ரங் தள அமைப்பின் நிர்வாகி கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அங்கு மிகவும் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கர்நாடகாவில் தொடர்ந்து பல வாரங்களாகப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. முதலில் ஹிஜாப் விவகாரம் கடந்த சில வாரங்களாகப் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இது தொடர்பாகக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட பின்னர், இப்போது தான் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. இந்நிலையில், அங்கு பஜ்ரங் தளம் நிர்வாகி கொலை செய்யப்பட்டுள்ளது மீண்டும் பதற்றத்தை அதிகரித்துள்ளது

 பஜ்ரங் தளம் நிர்வாகி கொலை

பஜ்ரங் தளம் நிர்வாகி கொலை

கர்நாடகாவின் ஷிமோகா நகரைச் சேர்ந்தவர் ஹர்ஷா. 26 வயதான இவர், அதே பகுதியில் தையல் கடையை நடத்தி வருகிறார். இவர் பஜ்ரங் தளம் என்ற இந்துத்துவ அமைப்பில் உள்ளார். இவர் நேற்றிரவு அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது, திடீரென கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவரைச் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

பதற்றம்

பதற்றம்

இந்த விவகாரத்தில் போலீசார் இரண்டு பேரைக் கைது செய்துள்ளனர். இதையடுத்து அங்குப் பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளது. அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்களுக்குத் தீவைக்கப்பட்டன. இதனால் கலவரம் ஏற்படுவதைத் தடுக்க அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டு, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஊர்வலம்

ஊர்வலம்

இருப்பினும், கட்டுப்பாடுகளைத் தாண்டி அப்பகுதியில் அதிகளவில் பஜ்ரங் தள ஆதரவாளர்கள் குவிந்தனர். மேலும், மருத்துவமனையில் இருந்து இளைஞரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்லும்போது அவர்களும் ஊர்வலமாக உடன் சென்றனர். கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால், சில இடங்களில் கண்ணீர்ப்புகை பயன்படுத்தப்பட்டு கூட்டத்தை கலைத்தனர். இது தொடர்பாக போலீஸ் விசாரணையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாகவும் தெரிவித்தார்.

 ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் விவகாரம்

ஹிஜாப் போராட்டம் தீவிரமாக நடைபெற்ற இடங்களில் ஷிமோகாவும் ஒன்று என்பதால் அதை இத்துடன் இணைத்து சிலர் கருத்துகளைக் கூற தொடங்கினர். இதனால் சில மணி நேரத்தில் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டது. இருப்பினும், இதனை மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா மறுத்துள்ளார். இதுவரை நடந்த விசாரணையில் கொலைக்கும் ஹிஜாப் சர்ச்சைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தெரிவித்தார். இந்த கொலை சம்பவம் வேறு காரணங்களுக்காக நடந்துள்ளதாகவும் ஷிவமொக்கா ஒரு சென்சிட்டிவ் நகரம் என்பதால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

 அமைச்சர் சர்ச்சை கருத்து

அமைச்சர் சர்ச்சை கருத்து

இருப்பினும், கர்நாடகாவின் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது, "ஹர்ஷா ஒரு நேர்மையான மனிதர். முஸ்லீம் ரவுடிகள் அவரைக் கொன்றுள்ளனர். ஹிஜாப் போராட்டத்தின் சமயத்தில் கர்நாடக காங். தலைவர் டி.கே. சிவக்குமார், தேசியக் கொடிக்குப் பதிலாகக் காவிக்கொடி ஏற்றப்பட்டதாகவும் சூரத்தில் 50 லட்சம் காவி துண்டுகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியிருந்தார். அவரது இதுபோன்ற கருத்துகளால் தான் வன்முறை அதிகரித்துள்ளது" என்றார்.

 போலீசார் விளக்கம்

போலீசார் விளக்கம்

கே.எஸ். ஈஸ்வரப்பாவின் இந்த பேச்சுக்குக் கர்நாடக காங். தலைவர் டி.கே. சிவக்குமார், சித்தராமைய்யா உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், "இந்தத் தாக்குதலை நான்கு பேர் கொண்ட கும்பல் நடத்தியுள்ளது. இதற்கும் ஹிஜாப் விவகாரத்திற்கும் தொடர்பு இல்லை. ஹர்ஷாவுக்கு தாக்குதல் நடத்தியவர்களைத் தெரிந்து இருக்கிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட மோதலின் பழிவாங்கும் செயலாகவே இந்த கொலை உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+