கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

Recommended Video

    Kannada நடிகர் Puneeth Rajkumar மருத்துவமனையில் அனுமதி

    இன்று காலை உடற்பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போது இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மோசமான உடல்நிலையுடன் பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் நடிகர் புனித் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு ஐசியூவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் சற்று நேரத்திற்கு முன் காலமானார்.

    செய்தி அறிந்து புனித் ராஜ்குமார் ரசிகர்கள் மருத்துவமனை வளாகம் முன் கூடி வருகிறார்கள். அங்கு ரசிகர்கள் பலநூறு பேர் கூடியதால் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

    பாதுகாப்பு

    பாதுகாப்பு

    கன்னட சினிமா உலகின் உச்சபட்ச ஸ்டார்களில் ஒருவர் புனித் ராஜ்குமார். பவர் ஸ்டார், சூப்பர் ஸ்டார், அப்பு என்று செல்ல பெயர்களில் அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் பல ஹிட் படங்களில் நடித்தவர். இன்று காலை ஜிம்மில் பயிற்சி எடுத்துக்கொண்டு இருக்கும் போது இவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

    மாரடைப்பு

    மாரடைப்பு

    அதன்பின் இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு இவரின் உடல்நிலை மோசமான காரணத்தால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. டாக்டர்கள் குழு இவரின் உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இவர் மோசமான உடல்நிலையுடன்தான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்

    அறிக்கை

    அறிக்கை

    தொடர் சிகிச்சை பலனளிக்காமல் அவர் சற்று நேரத்திற்கு முன் காலமானார். மருத்துவமனையில் மரணம் அடைந்த புனித் ராஜ்குமாருக்கு அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னணி நட்சத்திரமான புனித் ராஜ்குமாருக்கு திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புனித் ராஜ்குமார்

    புனித் ராஜ்குமார்

    அப்பு, ஜாக்கி, வம்சி, ராம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தவர் புனித் ராஜ்குமார். வெகு விரைவில் கன்னட உலகில் மிக உயரிய இடத்தை பிடித்த ஸ்டார். 46 வயது நிரம்பிய புனித் ராஜ்குமார் பாரம்பரியமான சினிமா குடும்பத்தை சேர்ந்தவர். இவரின் தந்தை ராஜ்குமார் பிரபல கன்னட நடிகர். இவரின் அண்ணன் சிவ ராஜ்குமார் கன்னட உலகின் இன்னொரு பிரபல நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    உடல் தகனம்

    உடல் தகனம்

    இந்த நிலையில் புனித் ராஜ்குமார் மரணத்தையொட்டி கர்நாடகா முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. புனித் ராஜ்குமார் உடல் மருத்துவமனையில் இருந்து இன்று சதாசிவநகரில் உள்ள அவரின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரின் குடும்பத்தினர், பிரபலங்கள் புனித் ராஜ்குமார் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். நாளை கண்டீரவா மைதானத்தில் இவரின் உடலுக்கு ரசிகர்கள், மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை இவரின் உடல் அரசு மரியாதையோடு தகனம் செய்யப்பட உள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+