விண்வெளி குப்பைகளுக்கு குட்பை.. களமிறங்கும் 'ஆர்எல்வி புஷ்பக்'! அடுத்த கட்டத்திற்கு தயாராகும் இஸ்ரோ
பெங்களூர்: செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஏவுகணையை இஸ்ரோ பரிசோதித்து வருகிறது. ஏற்கெனவே இது தொடர்பாக 2 கட்ட பரிசோதனைகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் மூன்றாம் கட்ட பரிசோதனை நடைபெற இருக்கிறது.
விண்வெளி துறையை பொருத்த அளவில் கடந்த 75 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்திருக்கிறது. இந்தியாவும் சீனாவும் ஒரே காலகட்டத்தில்தான் சுதந்திரம் அடைந்தது. ஆனால் சீனா இன்று தனக்கென ஒரு தனியான ஆய்வு மையத்தை விண்வெளியில் கட்டமைத்து வருகிறது. இந்தியா இந்த அளவுக்கு வளரவில்லை என்றாலும், சில ஐரோப்பிய நாடுகள் செய்ய முடியாத காரியத்தை கூட இந்தியா அசால்ட்டாக செய்து முடித்து வருகிறது.

இதற்கு உதாரணம்தான் ஆதித்யா எல் 1, சந்திரயான் 3 வெற்றி. இருப்பினும் விண்வெளி துறையில் நாம் அடைய வேண்டிய இலக்கு வெகு தூரமாக இருக்கிறது. குறிப்பாக பல அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும். குறிப்பாக மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் உள்ள ராக்கெட்டை வடிவமைக்க வேண்டும்.
விண்வெளி துறையை பொருத்த அளவில் மொத்தம் 4 வகையான ஆர்பிட்கள் அதாவது சுற்றுவட்ட பாதைகள் இருக்கின்றன. முதலாவது புவிசார் சுற்றுப்பாதை (Geostationary orbit). வானிலையை கண்காணிக்க இந்த இடத்தில் செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்படும். இங்கு நிலை நிறுத்தப்படும் செயற்கைக்கோள்கள் பூமியை சுற்றாது. ஒரேயொரு இடத்தில் மட்டும் நின்றுக்கொண்டிருக்கும். பூமி சுற்றும் போதும் அதுவும் சுற்றும்.
உதாராணத்திற்கு, இந்திய நிலப்பரப்பை பார்த்தவாறு ஒரு செயற்கைக்கோளை நாம் இந்த புவிசார் சுற்றுப்பாதையில் நிறுத்தினால், இந்த செயற்கைக்கோளின் ஃபோகஸ் முழுவதும் இந்தியா மீது மட்டுமதான் இருக்கும். எனவே வானிலை மாற்றத்தை துள்ளியமாக கணிக்கலாம். அதேபோல தொலை தொடர்புக்கும் இது பயன்படுகிறது.
ஆனால் புவிசார் சுற்றுப்பாதை எனப்பது பூமியிலிருந்து 35,786 கி.மீ தொலைவாகும். இதற்கடுத்து உள்ள சுற்றுவட்ட பாதை Low Earth orbit எனப்படும் பூமியின் தாழ் வட்டப்பாதையாகும். பூமியின் தரை பகுதியிலிருந்து 160 கி.மீ தொடங்கி 2000 கி.மீக்குள் உள்ள தொலைவுதான் Low Earth orbit என்று வரையறைக்கப்பட்டுள்ளது.
இங்கு செயற்கைக்கோள்களை ஏவ 88 நிமிடங்களிலிருந்து 127 நிமிடங்கள் ஆகும். இந்த பகுதியில்தான் ஏராளமான செயற்கைக்கோள்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல விண்வெளி நிலையங்களும் இங்குதான் கட்டமைக்கப்பட்டுள்ளன. மூன்றாவதாக இருப்பது Medium Earth orbit. அதாவது முதலில் சொன்ன Geostationary orbit மற்றும் இரண்டாவதாக உள்ள Low Earth orbitக்கு இடையில் உள்ள தொலைவுதான் Medium Earth orbit என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
இதற்கடுத்து நான்காவதாக இருப்பது Sun-synchronous orbit எனப்படும் சூரியன் ஒத்திசைவான சுற்றுப்பாதையாகும். இது பூமியிலிருந்து 600-700 கி.மீ தொலைவில் இருக்கிறது. ஆக இந்த நான்கு சுற்றுவட்டபாதையில்தான் செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்படுகின்றன.
இங்கு செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த ஒவ்வொரு முறையும் ராக்கெட் ஏவப்படுகிறது. இந்த ராக்கெட் திரும்பி வருவதில்லை. அதன் சிறு பாகம் கடலில் விழுந்துவிடுகிறது. மீதியுள்ள பாகங்கள் குப்பைகளாக பூமியை சுற்றிவர தொடங்கிவிடுகிறது.
இந்த ஸ்பேஸ் குப்பைகள் ஏற்கெனவே பூமியை சுற்றி வந்துக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மீது மோதலாம். அல்லது விண்வெளி ஆய்வில் ஈடுபடும் விண்வெளி வீரர்கள் மீது மோதி உயிரிழப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. பூமியிலிருந்து விண்வெளியை ஆய்வு செய்யும் விஞ்ஞாணிகள் தொலைநோக்கி மூலம் பார்க்கும்போது இந்த குப்பைகள் குறுக்கே வந்து தொல்லை தரலாம்.
எனவே இதனை குறைக்க ஒரு முறை பயன்படுத்தும் ராக்கெட்டுகளை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச விண்வெளி விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வலியுறுத்தலையடுத்து பயன்பாட்டுகு வந்ததுதான் ஃபால்கன் ராக்கெட். இது செயற்கைக்கோள்கள் மட்டுமல்லாது மணிதர்களையும் விண்ணிற்கு கொண்டு சென்று மீண்டும் பத்திரமாக தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை பல முறை பயன்படுத்தலாம்.
அதேபோல உலக நாடுகள் அனைத்தும் ராக்கெட்டுகளை உருவாக்க முயன்றன. அந்த வரிசையில் இருந்த இந்தியா தற்போது இந்த வகை ராகட்டைதான் உருவாக்கியுள்ளது. இந்த ராக்கெட் விண்வெளியில் செயற்கைக்கோளை நிலை நிறுத்திவிட்டு மீண்டும் பூமிக்கு திரும்பிவிடும். இந்த விமானத்திற்கு 'ஆர்எல்வி - புஷ்பக்' (RLV Pushpak) என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த ராக்கெட் ஏற்கெனவே இரண்டு முறை சோதனை செய்யப்பட்டிருக்கிறது.
இதனையடுத்து மூன்றாம் கட்ட சோதனைக்கு இஸ்ரோ தயாராகியுள்ளது. இந்த சோதனையில் சினூக் ஹெலிகாப்டர் பயன்படுத்தபட இருக்கிறது என்று இஸ்ரோ கூறியுள்ளது. இது பயன்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சர்வதேச தரத்திற்கு இந்திய விண்வெளித்துறை உயர்ந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications