400 பெண்களை பலாத்காரம் செய்த பிரஜ்வல்- ஓட்டுக் கேட்ட மோடி மன்னிப்பு கேட்கணும்-ராகுல் காந்தி
பெங்களூர்: 400 பெண்களை பலாத்காரம் செய்த குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பிரதமர் மோடி நாட்டு பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக கர்நாடகா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: பிரஜ்வல் ரேவண்ணா 4400 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்துள்ளார். இது ஏதோ ஒரு பாலியல் மோசடி அல்ல. மிகப் பெரிய பலாத்கார குற்றம்.

இத்தகைய பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவ்ண்ணாவுக்குதான் கர்நாடகா மக்கள் முன்பாக நின்று பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். இத்தகைய படுபாதகமான பலாத்கார குற்றவாளிக்குதான் ஓட்டுப் போடுங்கள் என உங்களிடம் பிரதமர் பதவியில் இருக்கிற மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். "இந்தப் பலாத்காரக்காரருக்கு வாக்களித்தால் அது எனக்கு உதவியாக இருக்கும்." என்று பேசுகிறார் பிரதமர் மோடி.
பிரதமர் மோடி இந்த நாட்டுப் பெண்களை ஒவ்வொரு பெண்ணையும் அவமதித்துவிட்டார். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட அத்தனை பாஜக தலைவர்களும் இந்த நாட்டுப் பெண்களிடம் தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும். உலகத்திலேயே எந்த ஒரு தலைவரும் படுபயங்கரமான பலாத்கார குற்றவாளிக்காக ஓட்டுக் கேட்டதே இல்லை. இதுதான் பாஜகவின் தத்துவம். இப்படித்தான் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எதனையும் செய்யக் கூடிய கட்சி பாஜக. இவ்வாறு ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. கர்நாடகா ஹாசன் தொகுதியின் சிட்டிங் எம்பி. தற்போது பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் தொகுதி வேட்பாளர் பிரஜ்வல். தற்போது வெளிநாட்டுக்கு தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டார். பிரஜ்வல் 300க்கும் மேற்பட்ட பெண்களை பலாத்காரம் செய்து 3,000 ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்திருந்தார். இத வீடியோக்கள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய எஸ்.ஐ.டி. லுக் அவுட் நோட்டீஸ் பிரகடனத்தை வெளியிட்டுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications